TNEA 2024: பொறியியல் மாணவர் சேர்க்கை: 1 லட்சத்தைத் தொட்ட விண்ணப்பங்கள்- பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு
மே 6ஆம் தேதி பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 94,939 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர்.
![TNEA 2024: பொறியியல் மாணவர் சேர்க்கை: 1 லட்சத்தைத் தொட்ட விண்ணப்பங்கள்- பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு TNEA Engineering Admission 2024 in Anna University 1 Lakh Applications Know how to apply TNEA 2024: பொறியியல் மாணவர் சேர்க்கை: 1 லட்சத்தைத் தொட்ட விண்ணப்பங்கள்- பலமடங்கு அதிகரிக்க வாய்ப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/12/5e34176941ef680bd79e36e3a065aca41715496402582332_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 6 நாட்களில் 1 லட்சத்தைத் தொட்டுள்ளன. மாணவர் சேர்க்கைக்கு இன்னும் 20 நாட்களுக்கும் மேல் இருக்கும் நிலையில், சேர்க்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. இதற்கு விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் மே 6-ம் தேதி வெளியாகின. அன்றைய தினமே பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவும் தொடங்கியது.
தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 440-க்கும் மேலான பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளுக்கு சுமார் 1.5 லட்சம் இடங்கள் உள்ளன. இவை இணையவழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.
பொறியியல் கலந்தாய்வு எப்போது?
அதிக மதிப்பெண்களைப் பெறும் மாணவர்கள் பொறியியல் படிப்பில் சேர்ந்தபிறகு, மருத்துவப் படிப்பில் சேர்ந்தால் அங்கு சென்றுவிடுகின்றனர். அந்த பொறியியல் இடம் காலியாவதைத் தடுக்க, கடந்த சில ஆண்டுகளாக மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்பட்ட பின்னரே பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்குகிறது.
இதன்படி 2024 -ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் நடத்தப்படுகிறது. மே 6ஆம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கிய நிலையில், இதுவரை 94,939 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். நேற்று மாலை நிலவரப்படி இந்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
அதில் 51,857 பேர் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர். இதில் 24,843 மாணவர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஜூன் 6-ம் தேதி வரை உள்ள நிலையில், விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்கள் https://www.tneaonline.org/user/login அல்லது http://www.dte.gov.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து, பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்.
முக்கியத் தேதிகள் என்னென்ன?
அசல் சான்றிதழ்கள் பதிவேற்றம் செய்ய இறுதி நாள் - 12.06.2024
சமவாய்ப்பு எண் ஒதுக்கப்படும் நாள் - 12.06.2024
சேவை மையம் வாயிலாக சான்றிதழ்கள் சரிபார்க்கும் நாட்கள் (இணையதள வாயிலாக) - 13.06.2024 முதல் 30.06.2024 வரை
தரவரிசைப் பட்டியல் வெளியீடு - 10.07.2024
சேவை மையம் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்தல் - 11.07.2024 முதல் 20.07.2024 வரை
கூடுதல் விவரங்களுக்கு...
தொடர்பு எண்: 044 - 2235 1014 / 1015
அழைப்பு எண்: 1800 - 425 - 0110
இ- மெயில் முகவரி: tneacare@gmail.com
கூடுதல் விவரங்களுக்கு: https://www.tneaonline.org என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)