மேலும் அறிய

TN TRB Recruitment: 2,582 ஆசிரியர் பணியிடங்கள்; புயல் பாதிப்பால் விண்ணப்பிக்க மீண்டும் அவகாசம் நீட்டிப்பு

மிக்ஜாம் புயல் பாதிப்பால் விண்ணப்பிக்க அவகாசம் டிசம்பர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

2,582 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க மீண்டும் டிசம்பர் 13ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

ஆசிரியர் தேர்வு வாரியம்:

பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் வட்டார வள மைய கருத்தாளர் (GRADUATE TEACHERS / BLOCK RESOURCE TEACHER EDUCATORS - BRTE) ஆகிய பணிகளுக்கு 2,582 காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு அண்மையில் வெளியானது. இதற்காக ஜனவரி மாதம் 7ஆம் தேதி போட்டித் தேர்வு நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலமாக மட்டுமே தேர்வர்கள் விண்ணப்பிக்க முடியும். 

இதற்கு விண்ணப்பிக்க இன்று (டிச.7) கடைசித் தேதி என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது. இதற்கிடையே மிக்ஜாம் புயல் பாதிப்பால் விண்ணப்பிக்க அவகாசம் டிசம்பர் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 13 வரை அவகாசம் நீட்டிப்பு

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் கூறும்போது, ’’சென்னை உயர் நீதிமன்ற இடைக்கால தீர்ப்பாணையின்படியும்‌ மிக்ஜாம்‌ (Michaung) புயல்‌ மழையின்‌ காரணமாகவும் மேற்கண்ட‌ பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள்‌ பதிவேற்றம்‌ செய்ய கடைசி தேதி 07.12.2023-ல் இருந்து 13.12.2023 மாலை 5.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பத்தில்‌ திருத்தம்‌ மேற்கொள்ள ‌ 14.12.2023 மற்றும்‌ 15.12.2023 ஆகிய இரண்டு நாள்களுக்கு திருத்தம்‌ செய்ய ஆசிரியர்‌ தேர்வு வாரிய இணையதளத்தில்‌ வழிவகை செய்யப்பட்டுள்ளது’’ என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

இத்தேர்வை எழுத ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு மற்றும் பி.எட். படிப்பை முடித்திருக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாளில் ( Tamil Nadu Teacher Eligibility Test Certificate- TNTET Paper – II) தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

பணியிடங்கள்

தமிழ் பாடம் -  371 பணியிடங்கள், 
ஆங்கிலப் பாடம் - 214 பணியிடங்கள், 
கணிதப் பாடம் - 200 பணியிடங்கள், 
இயற்பியல் பாடம் - 274 பணியிடங்கள், 
வேதியியல் பாடம் - 273 பணியிடங்கள், 
வரலாறு பாடம் - 346 பணியிடங்கள் உள்ளிட்ட 2,222 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஊதியம் எவ்வளவு?

36,400 ரூபாய் முதல் 11,5700 ரூபாய் வரை. 

எந்தெந்தப் பள்ளிகளில் என்னென்ன காலி இடங்கள்?

* பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகம்- 2171
* மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநரகம்- 23
* ஆதிதிராவிடர் நலத்துறை - 16
* மாற்றுத் திறனாளிகள் நலத் துறை - 12

வயது வரம்பு

பொதுப் பிரிவு தேர்வர்களுக்கு அதிகபட்சம் 53 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை

1. கட்டாய தமிழ் மொழித் தேர்வு

தேர்வர்கள் கட்டாய தமிழ் மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். 

2. பாடங்களுக்கான எழுத்துத் தேர்வு

150 கேள்விகளுக்கு 3 மணி நேரம் தேர்வு நடைபெறும்.

3. சான்றிதழ் சரிபார்ப்பு

முழுமையான விவரங்களைப் பெற: https://www.trb.tn.gov.in/admin/pdf/2603611744BT%20FINAL_25.10.2023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

கூடுதல் விவரங்களுக்கு: https://www.trb.tn.gov.in/

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

DMK MLA on kalla sarayam | ”என் தொகுதியிலேயே சாராயமா?”ON THE SPOT-ல் ரெய்டு! திமுக MLA Mass சம்பவம்!lok sabha Speaker Election | மோதி பார்க்கலாம் மோடி முஷ்டி முறுக்கும் ராகுல்!வரலாற்று சம்பவம் LOADINGAyodhya Ram Temple  rain water leakage | ”அய்யோ ராமா”அலரும் அயோத்தி அர்ச்சகர் கோவில் கூரையின் நிலைAccident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Leader of Opposition: மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
மக்களவை எதிர்க்கட்சி தலைவரானார் ராகுல் காந்தி.. காங்கிரஸ் அறிவிப்பு!
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
Chennai Rain: சென்னையில் திடீரென மின்னல்-இடியுடன் கூடிய மழை:ஆயிரம் விளக்கு, நுங்கம்பாக்கத்தில் வெளுக்கும் மழை
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
சபாநாயகர் பதவிக்கான தேர்தல்; காங்கிரஸ் முடிவால் மம்தா அப்செட் - சிக்கலில் இந்தியா கூட்டணி!
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
மதுரையில் மூட்டை, மூட்டையாக ரேஷன் அரிசிக் கடத்தல்? விசாரணைக்கு வலியுறுத்தும் சமூக ஆர்வலர்கள்
Indian 2 Trailer Review:
Indian 2 Trailer Review: "காந்திய வழியில் நீங்க! நேதாஜி வழியில் நான்" எப்படி இருக்கு இந்தியன் 2 ட்ரெயிலர்?
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
Breaking News LIVE: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி தேர்வு - காங்கிரஸ் தொண்டர்கள் மகிழ்ச்சி
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
பாலாற்றில் தடுப்பணை! தமிழ்நாட்டுக்கு அதிர்ச்சியளித்த ஆந்திர முதலமைச்சர் - அதிர்ச்சியில் மக்கள்
Indian 2:
Indian 2: "நான்கு நாட்கள் கயிற்றில் தொங்கிய கமல்" பிரமித்த இயக்குனர் ஷங்கர்!
Embed widget