மேலும் அறிய

ஆசிரியருக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வா? இது துரோகம்! - வலுக்கும் கண்டனம்

ஆசிரியர்களைக் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்வது வரவேற்கத் தக்கது. ஆனால், அதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறை மிகவும் தவறானதும், அநீதியானதும் ஆகும்.

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இடமாறுதல் கலந்தாய்வை நடத்தக் கூடாது என்றும் அது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் எனவும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

''தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள், தொழிற்கல்வி ஆசிரியர்கள், கலை ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பணியிட மாறுதல் கலந்தாய்வுகள் மே மாதம் 24ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 30-ஆம் தேதி வரை மொத்தம் 30 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆசிரியர்களைக் கலந்தாய்வு மூலம் பணியிட மாறுதல் செய்வது வரவேற்கத் தக்கது. ஆனால், அதில் கடைபிடிக்கப்படும் அணுகுமுறை மிகவும் தவறானதும், அநீதியானதும் ஆகும்.

பதவி உயர்வுக்குப் பிறகே கலந்தாய்வு

ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் கடைபிடிக்கப்படும் அடிப்படை நடைமுறை, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதுதான். இதுதான் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம் ஆகும். ஆனால், 2021-ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாகவே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் புதிய  நடைமுறையை புகுத்தியிருக்கிறது.

கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, அந்த நேரத்தில் காலியாக உள்ள இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதுதான் விதி ஆகும். அது அவர்களின் உரிமை. அப்படி செய்வது தான் பணியிட மாறுதலில் குழப்பங்களைத் தடுக்கும்.  

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப் பட்டால், அதற்கு முன் காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும். அத்தகைய சூழலில் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய போதிய இடங்கள் இருக்காது. அதனால், விருப்பம் இல்லாமல், அதிகாரிகளால் ஒதுக்கப்படும் இடங்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும்.  அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பணியிடம் காலியாகி விடும். அதனால், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.

பணம் வாங்கிக் கொண்டு இடமாறுதலா?

ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதன் நோக்கமே, பணியிட மாறுதல் முடிவடைந்த பிறகு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஏற்படும் காலியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை பணம் வாங்கிக் கொண்டு இடமாறுதலில் அமர்த்தலாம் என்பதுதான் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளைப் புறந்தள்ளி விட முடியாது.

2021ஆம் ஆண்டில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததன் காரணமே ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் தான். அவர்களின் பணியிட மாறுதல் நடைமுறையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வந்த நடைமுறையை மாற்றுவது அவர்களுக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். எனவே, புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையை ரத்து செய்து விட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Mallikarjun Kharge | ”நாங்கதான் முடிவு எடுப்போம்! I.N.D.I.A கூட்டணியில் மம்தா” எகிறி அடித்த கார்கேPadayappa elephant Viral Video | ஆட்டம் காட்டிய படையப்பா தூக்கிய வனத்துறையினர் யானையின் அட்ராசிட்டிChennai's Amirtha Aviation | சென்னைஸ் அமிர்தா சர்வதேச விமானக் கல்லூரி படிக்கும் போதே 15000 சம்பளம்Sathyaraj in Modi Biopic | அப்போ பெரியார்  இப்போ மோடிஅதிர்ச்சி கொடுத்த சத்யராஜ் மகள் சொன்ன GOOD NEWS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
“உண்மை கிலோ என்ன விலை?” என கேப்பாரு போல... பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்!
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
Breaking News LIVE: தோல்வி பயத்தில் பிரதமர் மோடி வெறுப்பு பேச்சுக்களை பேசி வருகிறார்- முதலமைச்சர் ஸ்டாலின்
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
நடுவானில் திக் திக்! திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு சென்ற விமானத்தில் கோளாறு - 167 பேர் கதி என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
CSK Vs RCB, IPL 2024: சி.எஸ்.கே - ஆர்.சி.பி போட்டியில் மழை வந்தால்? 5,10, 15 ஓவர்களாக குறைக்கப்பட்டால் விதிகள் என்ன?
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைவர் நாராயணன் வாகுல் காலமானார்!
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
ஜப்பான் நாட்டு தூதுவராக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் நியமனம் - அவர் யார் தெரியுமா?
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Rohit sharma MI Journey: மும்பை அணியுடனான ரோகித்தின் பயணம் - ஐபிஎல் ஃபைனலில் தோல்வியே சந்திக்காத ஹிட்மேன்
Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Malavika Mohanan : தோழியுடன் ரிலாக்ஸ் செய்யும் மாளவிகா மோகனன்!
Embed widget