மேலும் அறிய

CBSE: அமலுக்கு வந்த மும்மொழிக் கொள்கை; சிபிஎஸ்இ 9, 10ஆம் வகுப்புகளுக்கு 3 மொழிகள் கட்டாயம்- பாடத்திட்டம் வெளியீடு!

Three Language Policy CBSE: மாணவர்கள் தேர்வு செய்யும் அந்த மூன்று மொழிகளில், குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீக மொழிகளாக இருக்க வேண்டியது அவசியம்.

சிபிஎஸ்இ எனப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு முறையில் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தை அறிவித்துள்ளது. அதன்படி, வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயிலும் 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்று மொழிகள் படிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கை அனைத்து சிபிஎஸ்இ இணைவு பெற்ற பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பு ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு இணங்க இந்த அதிரடி மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தற்போது என்ன நடைமுறை?

தற்போதுள்ள நடைமுறையின்படி, 9 மற்றும் 10ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிகளை மட்டுமே (பொதுவாக ஆங்கிலம் மற்றும் இந்தி அல்லது மாநிலத்தின் தாய்மொழி) முதன்மை மொழிப் பாடங்களாகப் படித்து தேர்வெழுதி வந்தனர். 5ஆம் வகுப்பு வரை மட்டுமே மூன்றாவது மொழி கற்பிக்கப்பட்டு வந்தது.

ஆனால் புதிய நடைமுறை அமலுக்கு வரும்போது, மாணவர்கள் கூடுதலாக மற்றொரு மொழியையும் தேர்வு செய்து, மொத்தம் மூன்று மொழிகளைக் கட்டாயம் படிக்க வேண்டும்.

மும்மொழிக் கொள்கை எப்படி அமல்?

இந்த புதிய மும்மொழிக் கொள்கையில் மிக முக்கியமான நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, மாணவர்கள் தேர்வு செய்யும் அந்த மூன்று மொழிகளில், குறைந்தபட்சம் இரண்டு மொழிகள் இந்தியாவைச் சேர்ந்த பூர்வீக மொழிகளாக இருக்க வேண்டியது அவசியம். உதாரணமாக, ஒரு மாணவர் ஆங்கிலத்தை ஒரு பாடமாகத் தேர்வு செய்தால், மீதமுள்ள இரண்டு பாடங்களாக தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி அல்லது சமஸ்கிருதம் போன்ற ஏதேனும் இரு இந்திய மொழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்திய மொழிகளின் தொன்மையையும், சிறப்பையும் இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கவும், மாணவர்களிடையே பன்மொழிப் புலமையை வளர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் நாடு முழுவதும் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காகப் புதிய பாடப்புத்தகங்களை வடிவமைக்கும் பணியில் என்சிஇஆர்டி ஈடுபட்டுள்ளது. மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
அகில இந்திய தொழிற்தேர்வு: தனித்தேர்வர்களுக்கு மாத உதவித்தொகையுடன் அரிய வாய்ப்பு!
PM Yasasvi Scholarship : மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை.! அள்ளிக்கொடுக்கும் PM-YASASVI திட்டம்- விண்ணப்பிப்பது எப்படி.?
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
குடும்பத்துடன் பயணிக்க சிறந்த 7 சீட்டர் கார்! குறைந்த விலையில் அசத்தும் டாப் மாடல்கள்!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!
Puducherry CENTAC: நீட் இல்லாத கலை, அறிவியல் படிப்புகளுக்கு மாப்-அப் ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
FlyDubai Flight: 180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்? விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் , 17,000 அடியில் பயங்கரம்
180 உயிர்களை காப்பாற்றிய இந்தியர்..! விமான பயணிகளை கொல்ல முயன்ற கேப்டன் - 17,000 அடியில் பயங்கரம்
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Pressure Cooker: பிரஷர் குக்கரில் சமைப்பது இவ்வளவு ஆபத்தா? எந்தெந்த உணவு விஷமாக மாறும்? இல்லத்தரசிகளுக்கு அதிர்ச்சி எச்சரிக்கை!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
Crime: ஃபுல் மப்பிலும் அடங்காத தமிழ்செல்வன்.. தடம் மாறிய பூவரசியால் 9 வயது மகனுக்கு நேர்ந்த சோகம்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Ration Card: 1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
Ind Vs WI: சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
Embed widget