Tamilisai: பூ விக்குற பெண்ணின் காலர்ட்யூனாக தவெக பாடல் இருக்கு.. வியந்து பாராட்டிய தமிழிசை!
தமிழக வெற்றிக் கழகம் அனைத்து அரசியல் கட்சிகளையும் தாக்கும் அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று யாரும் நினைக்கவில்லை என்று தமிழிசை செளந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத வகையில் தமிழக வெற்றிக்ககழகத்தினர் ஆட்சியைப் பிடித்துள்ளனர். பலமிகுந்த திமுக கூட்டணி, வலுவான அதிமுக கூட்டணியை எதிர்த்தும், நாம் தமிழரின் போட்டியையும் எதிர்த்து தனி ஆளாக களமிறங்கிய தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ், விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை முதலமைச்சர் விஜய் அமைத்துள்ளார். விஜய்யின் வெற்றி குறித்து தமிழக பாஜக-வின் முன்னாள் தலைவரும், முன்னாள் ஆளுநருமான தமிழிசை செளந்தர்ராஜன் கூறியிருப்பதாவது,
பூ விற்கும் பெண்ணின் ரிங்டோன்:
எங்க அப்பா சொல்லுவாரு. எப்போது நீங்கள் ஆட்டோக்கார தம்பிகளிடமும், பூக்கார பெண்களிடமும், மீன் விற்கும் சகோதரிகளிடமும் சென்று சேர்கிறீர்களோ அப்போதுதான் நீங்கள் அனைவரும் தலைவர் ஆகிறீர்கள். அப்போதுதான் நான் வளர்ந்து வரும்போது சில ஆட்டோ அண்ணாக்கள் எல்லாம் வணக்கம் சொல்லும்போது ஆட்டோ அண்ணன்கிட்ட போய்ட்டோம். நாம தலைவர் ஆகிட்டோம்.
எப்போ நீங்க எளிய மக்களை அடைகிறீர்களோ? இந்தா போறாங்க தமிழிசைனு சொல்றதைவிட, வாங்கக்கா தமிழிசைனு சொல்றப்பதான் நீ தலைவரா உருவெடுத்திருக்கனு அர்த்தம்னு அப்பா சொல்வாங்க. நான் ஒருநாள் கல்லூரி பக்கத்தில் பூ வாங்கிக் கொண்டிருந்தேன் கல்லூரி பெண்கள் மத்தியில் மட்டுமில்ல, பூ விற்கும் பெண்ணிடமும் போய் சேர்ந்திருக்கிறார். அவர் கட்சியின் பாடலை காலர் ட்யூனாக வைத்துள்ளார்.
தாக்கிவிடும் தாக்கம்:
சாதாரணமாக சினிமா பாடல்தான் வைப்பார்கள். உடை ஒன்று கல்லூரிகளில் பிரபலம் ஆகும். காக்கி பேண்ட், க்ரீம் நிற சட்டையும் பிரபலம் ஆகிவிட்டது. இவை எல்லாம் பார்க்கும்போது ஏதோ தாக்கம் ஏற்பட்டிருக்கிறது என்று நினைத்தேன். ஆனால், அனைத்து அரசியல் கட்சியையும் தாக்கிவிடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கவில்லை. 5 சதவீதம் என்றோம், 10 சதவீதம் என்றோம், 25 சதவீதம் என்றோம். 30 சதவீதம் என்றோம். ஆனால், 35 சதவீதம் வாங்கி ஆட்சிக்கு வருவார்கள் என்ற கணிப்பு மிக மிக குறைவாகவே இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
மயிலாப்பூரில் தோல்வி:
தமிழக வெற்றிக் கழகத்தின் இந்த தேர்தல் வெற்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. திமுக இந்த தேர்தலில் தனது பக்கம் மிகவும் வலுவான கூட்டணியுடன் களமிறங்கியது. அதிமுக தங்களது பக்கம் வலுவான கூட்டணியுடன் களமிறங்கினர். இரு பெரும் பலமிகுந்த கட்சிகளுடன் தனித்துப் போட்டியிட்ட விஜய் பெரியளவு வெற்றி பெறமாட்டார் என்றே தேர்தலில் கணிக்கப்பட்டது. ஆனால், அவர் மாபெரும் வெற்றி பெற்றதுடன், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது காெளத்தூர் தொகுதியிலே தவெக வீழ்த்தியது.
தமிழிசை செளந்தர்ராஜன் இந்த தேர்தலில் மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட்டார். மயிலாப்பூர் தொகுதியில் தவெக வேட்பாளரும், உணவுத்துறை அமைச்சருமான வெங்கடரமணன் 70 ஆயிரத்து 70 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் வேலு 41 ஆயிரத்து 98 வாக்குகளும், பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தர்ராஜன் 32 ஆயிரத்து 328 வாக்குகளும் பெற்றனர். தமிழிசை 3வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
">
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















