மேலும் அறிய

Leema Rose vs EPS | ”என் மேல நடவடிக்கையா? அப்போ பணத்தை கொடுங்க” EPS-ஐ நெருக்கும் லீமா ரோஸ்

எஸ்.பி.வேலுமணி அணியில் இருக்கும் லீமா ரோஸின் பதவியை மட்டும் இபிஎஸ் இன்னும் பறிக்காமல் இருக்கும் நிலையில் நான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுத்து விட்டு கட்சியில் இருந்து நீக்கிகொள்ளட்டும் என லீமா ரோஸ் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

சட்டப்பேரவை தேர்தலில் 3வது இடத்துக்கு தள்ளப்பட்ட அதிமுக தற்போது 2 அணியாக பிளவுபட்டு கிடக்கிறது. அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தலைமையில் ஒரு அணியும், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தலைமையில் ஒரு அணியும் உருவானது. அதிமுக சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமியையும், கொறடாவாக அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் நியமிக்க கோரி சபாநாயகரிடம் கடிதம் கொடுத்தனர். இதே போல எஸ்.பி.வேலுமணி அணி விஜயபாஸ்கரை கொறடாவாக நியமிக்க கடிதம் கொடுத்தது. ஆனால் தற்போது வரை சபாநாயகர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளார்.

ஆனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன் என ஒட்டுமொத்தமாக 27 மாவட்ட செயலாளர்களையும், கட்சியின் முக்கிய பொறுப்புகளில் இருப்பவர்களையும் நீக்கி உத்தரவிட்டார். ஆனால் எஸ்.பி.வேலுமணியின் அணியில் உள்ள லால்குடி தொகுதியின் எம்எல்ஏவான லீமா ரோஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததற்கு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இந்திய ஜனநாயகக் கட்சியின் மாநில இணைப் பொதுச் செயலாளராகப் பணியாற்றிய லாட்டரி அதிபர் மார்ட்டினின் மனைவி லீமா ரோஸ் அங்கிருந்து விலகி கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். கட்சியில் இணைந்தவருக்கு அடுத்த ஒரு வாரத்தில் அதிமுக மகளிர் அணி இணைச்செயலளார் பொறுப்பானது வழங்கப்பட்டது. இது மட்டுமில்லாமல் மார்ச் மாதம் லால்குடி தொகுதி வேட்பாளராக லீமா ரோஸ் பெயர் இடம்பிடித்தது. லீமா ரோஸ் அசூர வளர்ச்சியானது அதிமுகவில் மட்டுமில்ல அரசியல் வட்டாரமே திரும்பிபார்க்கவைத்தது.

அதிமுக இரண்டாக பிளவுப்பட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ள எஸ்.பி.வேலுமணி தலைமையிலான அணியில் லீமா ரோஸ் முக்கிய பாங்காற்றி வருகிறார். இந்தநிலையில் எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது லீமா ரோஸ் மட்டும் தப்பித்து விட்டார் என நகைச்சுவையாக பேசியுள்ளனர். அதற்கு லீமா ரோஸ் அதிமுகவில் இணைய பெறப்பட்ட பணத்தையும், கட்சி பதவி வழங்க கொடுத்த பணத்தையும் திருப்பி கொடுத்து விட்டு கட்சியில் இருந்து நீக்கிகொள்ளட்டும் என லீமா ரோஸ் பேசியதாக தகவல் வெளியாகி வருகிறது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamil Nadu Top 25 News : மாவட்டம் தோறும் பரபரப்பு... தமிழகத்தின் இன்றைய டாப் 25 செய்திகள்!
Tamil Nadu Top 25 News : மாவட்டம் தோறும் பரபரப்பு... தமிழகத்தின் இன்றைய டாப் 25 செய்திகள்!
100% இட ஒதுக்கீட்டின் நூற்றாண்டு தொடக்கம்! சமூகநீதிப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - அன்புமணி அதிரடி
100% இட ஒதுக்கீட்டின் நூற்றாண்டு தொடக்கம்! சமூகநீதிப் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் - அன்புமணி அதிரடி
TVK:
TVK: "ரூபாய் 30 கோடி தர்றேன்.." குதிரை பேரம் நடத்திய அதிமுக பிரமுகர்! தவெக எம்எல்ஏ பகிரங்க குற்றச்சாட்டு
மைதானத்தில் நடந்த ஒரே ஒரு மோதல்... பறிபோன 30 வயது கால்பந்து வீரரின் உயிர்: உலக கால்பந்து ரசிகர்களை உலுக்கிய சோகம்!
மைதானத்தில் நடந்த ஒரே ஒரு மோதல்... பறிபோன 30 வயது கால்பந்து வீரரின் உயிர்: உலக கால்பந்து ரசிகர்களை உலுக்கிய சோகம்!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
Minister CTR Nirmalkumar : 'தவெக ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் சேர்ந்து திமுக சதி’ அமைச்சர் நிர்மல்குமார் பரபரப்பு பேட்டி..!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
185 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி சுருண்ட நியூசி.அணி - வெற்றி முனைப்பில் இந்தியா!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புதிய திட்டத்தை அறிவித்த தமிழக அரசு - 3 நாட்கள் மட்டுமே டைம்!
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
அமெரிக்காவின் செனட் சபையை கைப்பற்றிய ஜனநாயக கட்சி - ட்ரம்பின் அதிபர் பதவிக்கு ஆபத்தா?
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
தீபாவளிக்கு பட்டாசு வெடிக்கலாமா? கூடாதா? - தமிழக அரசு வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!
Kavithai Gopal:
Kavithai Gopal: "அட்ஜஸ்ட்மென்ட் பண்ணு பட வாய்ப்பு தர்றேன்" ஆதாரத்துடன் சிக்கிய கவிதை கோபால்!
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
இன்று எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! - வானிலை ஆய்வு மையத்தின் ரிப்போர்ட் என்ன?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
முதல்வராக மாணவர்களுக்கு கல்வி விருது வழங்கும் விஜய் : நாளை விழா தொடங்கும் நேரம், இடம் எது தெரியுமா?
Embed widget