Schools Reopening: பள்ளிகள் திறப்பு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்..!
பெற்றோர்கள்,மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார்
பெற்றோர்கள்,மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவு செய்வார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்தார்.
திருச்சியில் அறநிலையத் துறையின் கீழ் இயங்கும் திருக்கோயில் பணியாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதி மற்றும் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைசச்சர் அன்பில் மகேஷ் கலந்துகொண்டு நிவாரணப் பொருட்களை வழங்கினார். பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கொரோனா பெருந்தொற்று பரவல் குறைந்த பிறகு ,பள்ளிக்கூடங்கள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படும்"என்று தெரிவித்தார்.
மேலும், கொரோனா மூன்றாவது அலை தொடர்பாக நிச்சயமற்ற நிலை உள்ளது. அடுத்தடுத்த கொரோனா அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்களா என்ற கேள்விக்கான பதிலும் நம்மிடம் இல்லை. எனவே, ஐசிஎம்ஆர், உலக சுகாதார நிறுவனம் வழங்கும் வழிமுறைகளை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வோம். பெற்றோர்கள், மாணவர்களின் மனநிலைக்கு ஏற்ப தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து முதல்வர் முடிவு செய்வார் என்றும் தெரிவித்தார்.
Tamil Nadu Class 10 Marks: பிளஸ் 2 மதிப்பெண் வழங்க 10ம் வகுப்பு மதிப்பெண் தேவை!
இந்த ஆண்டு மார்ச் மாதம் ஏற்பட்ட கொரோனா இரண்டாவது அலையால், புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை மீண்டும் தடைபட்டது. கடந்த ஜூலை 14-ஆம் தேதி முதல், நோய்த் தோற்றுப் பரவல் குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான பணிகள் தொடங்கியது. இருப்பினும், பள்ளிகளில் வகுப்பு நடத்த அனுமதி கிடையாது என்றும், மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று சேர்க்கைக்கான விண்ணப்பிப்பது அல்லது மாற்றுச் சான்றிதழ் பெறுவது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடலாம் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
இதற்கிடையே, வரும் கல்வியாண்டில், இரண்டாம் முதல் பத்தாம் வகுப்பு வரையில் வீடியோ பாடப்பதிவு வடிவில் தயாரிக்கப்பட்ட பாடங்களை கல்வித் தொலைக்காட்சி வாயிலாக ஒளிபரப்பு செய்யும் நிகழ்ச்சியை தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னதாக துவங்கி வைத்தார்.
TN Class 12 Evaluation: ப்ளஸ் 2 மதிப்பெண் கணக்கீடு எப்படி? - அரசு அறிவிப்பு
கொரோனா மூன்றாம் அலை வந்தால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர். ஏனென்றால் 18 வயதுக்கு குறைவானவர்களுக்கு இப்போது நாம் தடுப்பூசி போடவில்லை. மூன்றாம் அலையில் கொரோனா வைரஸானது தடுப்பூசி போடாதவர்களையே தொற்றும் என தமிழ்நாடு அரசின் முன்னாள் பொதுசுகாதார இயக்குநரும் கொரோனா மாநிலப் பணிக்குழு உறுப்பினருமான டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.
அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் - கமல்ஹாசன் கோரிக்கை
மேலும், மூன்றாம் அலையின் தாக்கத்தில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்க வேண்டும் என்றால் குழந்தையோடு இருக்கின்ற மற்றும் தொடர்புகொள்கிற அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும். அப்போதுதான் குழந்தையைச் சுற்றி பாதுகாப்பு வளையம் கிடைக்கும். மேலும் குழந்தைகளைத் தேவையில்லாமல் வெளியில் அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.