Half Yearly Exam: வெளியான அட்டவணை; 1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு எப்போது தெரியுமா?
Half Yearly Exam 2025 timetable: 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது.

1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு நடைபெறும் தேதிகள் வெளியாகி உள்ளன. இதன்படி 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தொடங்க உள்ளன. டிசம்பர் 23ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு நடக்கிறது.
அதேபோல 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. இவர்களுக்கும் 23ஆம் தேதி வரை தேர்வுகள் நடக்க உள்ளன.

10ஆம் வகுப்புத் தேர்வு எப்போது?
10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தமிழ் தேர்வு நடக்க உள்ளது. தொடர்ந்து 12ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வும் 15ஆம் தேதி கணக்குப் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது. டிசம்பர் 18ஆம் தேதி வியாழக் கிழமை அன்று அறிவியல் பாடத் தேர்வு நடக்கிறது. அதேபோல 22ஆம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வும் 23ஆம் தேதி விருப்பப் பாடத்துக்கும் அரையாண்டுத் தேர்வு நடக்க உள்ளது.
பிளஸ் 2 தேர்வு அட்டவணை
12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 10ஆம் தேதி தமிழ் தேர்வு நடக்க உள்ளது. தொடர்ந்து 12ஆம் தேதி ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வும் 15ஆம் தேதி கணக்குப் பாடத்துக்கான தேர்வும் நடைபெற உள்ளது. அதே நாளில், விலங்கியல், வணிகம், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, உணவு சேவை மேலாண்மை, வேளாண் அறிவியல் மற்றும் நர்சிங் (பொது) தேர்வுகள் நடக்க உள்ளன.
டிசம்பர் 17ஆம் தேதி - வேதியியல், கணக்கியல், புவியியல்
டிசம்பர் 19ஆம் தேதி - இயற்பியல், பொருளாதாரம், வேலைவாய்ப்புத் திறன்கள்
டிசம்பர் 22ஆம் தேதி – உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்குத் தேர்வுகள் நடக்கின்றன.
டிசம்பர் 23- கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள் உள்ளிட்ட பாடங்களுக்குத் தேர்வுகள் நடக்கின்றன.
இவர்கள் அனைவருக்கும் காலை 9.45 மணி முதல் மதியம் 1 மணி வரை அரையாண்டுத் தேர்வு நடைபெற உள்ளது. முதல் 10 நிமிடங்கள் வினாத்தாளை வாசித்துப் பார்க்கவும் அடுத்த 5 நிமிடங்கள் தேர்வரின் விவரங்களை சரிபார்க்கவும் ஒதுக்கப்பட்டுள்ளது. சரியாக 10 மணிக்குத் தேர்வு தொடங்கி, 1 மணி வரை நடைபெற உள்ளது.
1 முதல் 5ஆம் வகுப்புக்கு எப்போது?
டிசம்பர் 15 முதல் 23ஆம் தேதி வரை இரண்டாம் பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத் தேர்வு நடக்க உள்ளது.






















