மேலும் அறிய

Plus 2 exam results: பிளஸ் 2 துணைத்தேர்வு முடிவுகள் ஆக.22-ல் வெளியீடு: பதிவிறக்கம் செய்வது எப்படி?

12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( ஆகஸ்ட் 22ஆம் தேதி) வெளியாக உள்ளன. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

12-ம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் ( ஆகஸ்ட் 22ஆம் தேதி) வெளியாக உள்ளன. இதைப் பதிவிறக்கம் செய்வது எப்படி என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தேர்வர்கள் ஆகஸ்ட் 22ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்கள் முடிவுகளை மதிப்பெண் பட்டியலாகப்  பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்தேர்வு, ஜூலை / ஆகஸ்ட்‌ 2022 - தேர்வு முடிவு - மதிப்பெண்‌ பட்டியல்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளுதல்‌, விடைத்தாள்‌ நகல்‌ மற்றும் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறைகள்‌ குறித்து அரசுத் தேர்வுகள்‌ இயக்குநர் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 

நடைபெற்ற ஜூலை / ஆகஸ்ட்‌ 2022, மேல்நிலை இரண்டாம்‌ ஆண்டு துணைத்‌ தேர்வெழுதிய தேர்வர்கள்‌ தேர்வு முடிவினை, மதிப்பெண்‌ பட்டியலாக (Statement Of Marks)  22.08.2022 (திங்கட்கிழமை) பிற்பகல்‌ 2.00 மணி முதல்‌ http://dge.tn.gov.in என்ற இணையதளத்திலிருந்து தங்களது தேர்வெண்‌  (Roll No.) மற்றும்‌ பிறந்த தேதியை (Date of Birth) பதிவு செய்து ஆன்லைனில்‌ பதிவிறக்கம்‌ செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.

வழிமுறைகள்‌ பின்வருமாறு:

1. தேர்வர்கள்‌ வருகிற 22.08.2022 (திங்கட்கிழமை) பிற்பகல்‌ 2.00 மணி முதல்‌ தமது மதிப்பெண்‌ பட்டியலை http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியிலிருந்து பதிவிறக்கம்‌ செய்து கொள்ளலாம்‌.

2. மேற்படி இணையதள முகவரிக்குள்‌ லாகின் செய்தவுடன் தேர்தல் முடிவுகள் தோன்றும்‌. அதில்‌ “HSE Second Year Supplementary Exam, Jul / Aug 2022 - Result - Statement Of Marks Download” என்ற வாசகத்தினை க்ளிக் செய்தால்‌ தோன்றும்‌ பக்கத்தில்‌ தேர்வர்கள்‌ தங்களது தேர்வெண்‌ (Roll No.) மற்றும்‌ பிறந்த தேதி  (Date of Birth) ஆகிய விவரங்களைப் பதிவு செய்து, தங்களது மதிப்பெண்‌ பட்டியலினை பதிவிறக்கம்‌ செய்துகொள்ளலாம்‌ என அறிவிக்கப்படுகிறது.

விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கும்‌ முறை:

ஐூலை / ஆகஸ்ட்‌ 2022, மேல்நிலை துணைத்‌ தேர்வுக்கான விடைத்தாள்‌ நகல்‌ மற்றும்‌ மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ தேர்வர்கள்‌ சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத்‌ தேர்வுகள்‌ உதவி இயக்குநர்‌ அலுவலகத்திற்கு 24.08.2022 (புதன்கிழமை) மற்றும்‌ 25.08.2022 (வியாழக்கிழமை) ஆகிய இரண்டு நாட்களில்‌ காலை 10.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை நேரில்‌ சென்று உரிய கட்டணம்‌ செலுத்தி பதிவு செய்துகொள்ள வேண்டும்‌.

விடைத்தாள்‌ நகல்‌ (Scan Copy of the Answer Script) பெறுவதற்கான கட்டணம்‌:

ஒவ்வொரு பாடத்திற்கும்‌ - ரூ.275/-

மறுகூட்டல்‌ -॥ (Re-totalling-I) கட்டணம்‌ :

உயிரியல்‌ பாடத்திற்கு மட்டும்‌ - ரூ.305/-

ஏனையப்‌ பாடங்கள்‌ (ஒவ்வொன்றிற்கும்‌) - ரூ.205/-

இவ்வாறு  அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
"இந்தியா கூட்டணியில் உங்களுக்கு இடம் இல்ல" காங்கிரஸ்-க்கு கெட் அவுட்.. கொதிக்கும் கெஜ்ரிவால்!
TN Rain: மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மழை மட்டுமல்ல பனியும் இருக்கும்: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும்?
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
மதுரை மக்களே உஷார்.. நாளை (27-12-2024) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் இதுதான்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
Embed widget