மேலும் அறிய

CMRF Eligibility Test: மாதாமாதம் 28 ஆயிரம் ரூபாய்; முதலமைச்சர் ஆராய்ச்சி உதவித்தொகைக்கு நவ.15 வரை விண்ணப்பிக்கலாம்- எப்படி?

தகுதியான மாணவர்கள் 2023 - 2024 ஆம்‌ ஆண்டிற்கான முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகை தகுதித்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாட்டில்‌ உள்ள அரசு கலை மற்றும்‌ அறிவியல்‌ கல்லூரிகளில்‌ முழு நேர ஆராய்ச்சி படிப்பிற்காக நிதியுதவி அளிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக ‌முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகைத்‌ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டை சார்ந்த தகுதியான மாணவர்கள் 2023 - 2024 ஆம்‌ ஆண்டிற்கான முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகை தகுதித்‌ தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள்‌ இணையம்‌ வாயிலாக 20.10.2023 முதல்‌ விண்ணப்பித்து வரும் நிலையில்‌  15.11.2023 பிற்பகல்‌ 5.00 மணி வரை விண்ணப்பிக்கலாம்‌ எனத்‌ தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாருக்கெல்லாம் தகுதி?

முதுகலை முடித்து, முழுநேர முனைவர் படிப்பில் அரசுக் கல்லூரிகளில் சேரும் யாரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். இதில் கலை, மானுடவியல், சமூக அறிவியல் பாடப் பிரிவுகளில் இருந்து 60 பேரும் அறிவியல் பாடப் பிரிவில் இருந்து 60 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர். 

விண்ணப்பக் கட்டணம் 

முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகைக்‌ திட்டத்துக்கு நடத்தப்படும் தகுதித்‌ தேர்வுக்கு விண்ணப்பக் கட்டணம், தேர்வுக் கட்டணம், பதிவுக் கட்டணம் என எதுவும் கிடையாது. 

கலை, மனித வளம், சமூக அறிவியல் பிரிவின் கீழ்  (Arts, Humanities & Social Science Stream) யார் யார்?

தமிழ், ஆங்கில இலக்கியம் - 10 பேர், வரலாறு, சுற்றுலா மற்றும் பயண மேலாண்மை (Public Administration), புவியியல் - 10 பேர், அரசியல் அறிவியல், பொது நிர்வாகம் - 10 பேர், வர்த்தகம், மேலாண்மை கல்வி, சமூகப் பணி - 10 பேர், பொருளாதாரம் - 10 பேர், ஊடகவியல், பத்திரிகை மற்றும் மாஸ் கம்யூனிகேஷன், இசை, ஆடை வடிவமைப்பு மற்றும் பேஷன், நூலகம் மற்றும் தகவல் அறிவியல், உடற்கல்வி, உளவியல் - 10 பேர் என இடம் ஒதுக்கப்படுகிறது. இதன்மூலம் மொத்தம் 60 பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

அறிவியல் பிரிவில் (Science Stream)

கணிதம் / புள்ளியியல் - 10 பேர், இயற்பியல் / எலக்ட்ரானிக்ஸ் - 10 பேர், வேதியியல் / உயிர் வேதியியல் - 10 பேர், தாவரவியல், விலங்கியல், உயிரியல், உயிர் தொழில்நுட்பவியல் - 10 பேர், கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பவியல் - 10 பேர், சுற்றுச்சூழல் அறிவியல்/ புவி அறிவியல் / ஹோம் சயின்ஸ் - 10 பேர் என 60 பேருக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தேர்வு எப்போது?

டிசம்பர் 10ஆம் தேதி அன்று முதலமைச்சரின்‌ ஆராய்ச்சி உதவித்‌ தொகைக்‌ திட்டத்திற்கான தகுதித்‌ தேர்வு நடைபெற உள்ளது.

தேர்வு முறை

மொத்தம் 3 மணி நேரம் நடைபெறும் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 100 ஆகும். மாற்றுத் திறனாளிகளுக்கு 4 மணி நேரம் தேர்வு நடைபெறும். இதில் இரண்டு பகுதிகள் இடம்பெறும். முதல் பகுதியில் கொள்குறி வகையில் 40 மதிப்பெண்களுக்கு 40 கேள்விகள் கேட்கப்படும். நெகடிவ் மதிப்பெண்களும் உண்டு. இரண்டாவது பகுதியில் 2 மணி நேரத்துக்கு 60 மதிப்பெண்களுக்குத் தேர்வு நடைபெறும். 

உதவித்தொகை எவ்வளவு?

தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் தேர்வர்களுக்கு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு மாதாமாதம் 25 ஆயிரம் ரூபாயும் மூன்றாம் ஆண்டு 28 ஆயிரம் ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்பட உள்ளது. 

முழுமையான விவரங்களை அறிய https://www.trb.tn.gov.in/admin/pdf/6870192337CMRF%20%20Final%20Notification%20Dt.13.10.2023..pdf

கூடுதல் தகவல்களுக்கு: https://www.trb.tn.gov.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Allu Arjun : ‘’கைது பண்ணது சரிதான்’’அல்லுவை எதிர்க்கும் பவன்! ரேவந்த் ரெட்டிக்கு SUPPORT! : Pawan KalyanNehru Issue | ”நேருவையே தப்பா பேசுறியா” STANDUP COMEDIAN-க்கு ஆப்பு! கடும் கோபத்தில் காங்கிரஸ்!TTF Vasan  Issue : Snake Babu அவதாரம்.. சிக்கலில் சிக்கிய டிடிஃஎப்!  POLICE விசாரணையில் திடுக்!TVK Bus stand issue | ’’ஏய்…ஆளுங்கட்சியா நீ! யாரை கேட்டு கை வச்சீங்க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
சந்திரபாபு முதல் ஸ்டாலின் வரை: எந்த முதலமைச்சருக்கு எவ்வளவு சொத்து? யார் முதலிடம்? யார் கடைசி? மொத்த லிஸ்ட்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
10th Exam: பொதுத்தேர்வு மாணவர் பட்டியலில் திருத்தம் செய்​ய​ இதுதான் கடைசி வாய்ப்பு; தேர்வுகள் இயக்ககம்
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்....  சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
New Year 2025: புத்தாண்டு கொண்டாட்டம்.... சேலம் போலீஸ் விடுத்த எச்சரிக்கை
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
ரேக்ளா பந்தயத்திற்கு தயாராகும் திருக்கடையூர்....! போட்டி எப்போதும் தெரியுமா?
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
உஷார் மக்களே! Whatsapp-ல் உலா வரும் வைரஸ்; தொட்டால் சோலி முடிஞ்சு... உடனே Delete பண்ணுங்க
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Anna University Issue: எங்க போனீங்க எல்லோரும்? அண்ணா பல்கலை. மாணவி பாலியல் விவகாரத்தில் வாய் திறக்காத நடிகர்கள்!
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
Indias External Debt: அம்மாடியோவ்..! இந்தியாவின் வெளிநாட்டு கடன் மட்டும் ரூ.60 லட்சம் கோடியாக உயர்வு, அப்ப மொத்தமா?
New Year 2025:
New Year 2025: "அது ஏன் திமிங்கலம்" ஜன.1ம் தேதி புத்தாண்டு கொண்டாட்றாங்க? காரணம் இதான் வாத்தியாரே!
Embed widget