![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
CM Talent Search Exam: மாதம் ரூ.1000: டிச.1ல் வெளியாகும் திறனாய்வுத்தேர்வு முடிவுகள்! காண்பது எப்படி?
தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு, 07.10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. இதை 1,27,673 மாணவ மாணவியர்கள் எழுதினர் .
![CM Talent Search Exam: மாதம் ரூ.1000: டிச.1ல் வெளியாகும் திறனாய்வுத்தேர்வு முடிவுகள்! காண்பது எப்படி? TN CM Talent Search Exam release Date Dec 1st Directorate of Government Examinations DGE CM Talent Search Exam: மாதம் ரூ.1000: டிச.1ல் வெளியாகும் திறனாய்வுத்தேர்வு முடிவுகள்! காண்பது எப்படி?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/21/c8e11411c4427a1ab8ebd399621d0345169261252829676_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மாதாமாதம் ரூ.1000 வழங்க வழிசெய்யும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு முடிவுகள் டிச.1-ம் தேதி வெளியாக உள்ளன. இதைக் காண்பது எப்படி என்று பார்க்கலாம்.
அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணாக்கர்களின் திறனை கண்டறிவதற்கும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத்தேர்வு, 07.10.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற்றது. 1,27,673 மாணவ மாணவியர்கள் தேர்வை எழுதினர் .
இத்தேர்வில் 1000 மாணவர்கள் (500 மாணவர்கள் + 500 மாணவியர்கள்) தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000/- வீதம் ஒரு கல்வியாண்டிற்கு 10 மாதங்களுக்கு மட்டும் உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000/ வழங்கப்படும்.
இதற்கிடையில் . தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பதினொன்றாம் பயிலும் வகுப்பு மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலாக ஆகஸ்ட் 7 முதல் 18ஆம் தேதி வரை விண்ணப்பித்தனர். அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து தேர்வு கட்டணம் ரூ.50/- (ரூபாய் ஐம்பது மட்டும்) சேர்த்து பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைத்தனர்தேர்விற்கு செப்டம்பர் 23ஆம் தேதி அன்று நடைபெற்றது. தொடர்ந்து அக்டோபர் 7ஆம் தேதி தேர்வு நடைபெற்றது. தேர்வை 1,27,673 மாணவ மாணவியர்கள் எழுதினர். இத்தேர்வின் முடிவுகள் 01.12.2023 (வெள்ளிக் கிழமை) காலை 11.00 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.
காண்பது எப்படி?
* மாணவர்கள் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் காணலாம்.
* மாணவர்கள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் RESULTS என்ற தலைப்பில் செல்ல வேண்டும்.
* அதில், TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION Results என்ற பக்கத்தை க்ளிக் செய்ய வேண்டும்.
* தொடர்ந்து மாணவர்கள் தங்களது பதிவண் மற்றும் பிறந்த தேதியினை உள்ளீடு செய்து, தாங்கள் பெற்ற மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.
மேலும் ஊக்கத் தொகைக்கான தெரிவுப் பட்டியல் இதே இணையதளத்திலே Examiantion > TAMILNADU CHIEF MINISTER TALENT SEARCH EXAMINATION என்ற பக்கத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு குறித்து விரிவாக அறிய: https://tnegadge.s3.amazonaws.com/notification/TCMTSE/1690884982.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்ய வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)