மேலும் அறிய

Ambedkar Law University: விண்ணப்பித்து விட்டீர்களா? அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்வது இப்படித்தான்!

TN Ambedkar Law University admission 2024: சட்டப் மாணவர்கள் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பப் பதிவு மே 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஒருங்கிணைந்த 5 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு இணையம் மூலம் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.           

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின்கீழ் சீர்மிகு சட்டப் பள்ளிகள், அரசு சட்டக் கல்லூரிகள், தனியார் சட்டக் கல்லூரிகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. தமிழ்நாட்டில் 14 சட்டக் கல்லூரிகள் இயங்கிவருகின்றன.

என்னென்ன படிப்புகள்?

தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 
பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பி.பி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ்
பி.காம். எல்எல்பி ஹானர்ஸ்
பி.சி.ஏ. எல்எல்பி ஹானர்ஸ் உள்ளிட்ட படிப்புகள் வழங்கப்படுகின்றன. இதற்கு மாணவர்கள் மே 31ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், விண்ணப்பப் பதிவு மே 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முன்னதாக தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சந்தோஷ் குமார், சட்டப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மே 10ஆம் தேதி தொடங்கி வைத்தார். எனினும் 3 ஆண்டு எல்எல்பி, எல்எல்பி ஹானர்ஸ் சட்டப் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.

மாணவர் சேர்க்கை எப்படி?

தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு விதிமுறைகளைப் பின்பற்றியே மாணவர் சேர்க்கை நடைபெறும். சட்டப் படிப்பில் சேர வயது உச்ச வரம்பு எதுவும் இல்லை.

கல்வித் தகுதி

அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரிகளில் சேர, பொதுப் பிரிவினர் 12ஆம் வகுப்பு தேர்வில் குறைந்தபட்சம் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40 சதவீதம் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

எனினும் அம்பேத்கர் சீர்மிகுச் சட்டப்பள்ளியில் உள்ள இடங்களில் சேர்வதற்கு 12ஆம் வகுப்பு தேர்வில் றைந்தபட்சம்70 சதவீதம் மதிப்பெண்களை வாங்கி இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினர் 60 சதவீதத்திற்குக் குறையாமல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பது எப்படி?

மாணவர்கள் https://www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யும் முன்னால், https://tndalu.emsecure.in/5YearsLaw/Documents/Instructions%20for%20filling%20online%20Application%20Form%20for%205-year%20courses%20-%20Tamil.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து காணலாம் என தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

உதவி எண்கள்: 044-24641919 / 044-24957414 / +91 7200043361

இ மெயில் முகவரி: helpdesk.tndaluadmissions@gmail.com

கூடுதல் விவரங்களுக்கு: https://www.tndalu.ac.in

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IND vs NZ  Highlights | கோலியின் மோசமான பேட்டிங்வாஷ் அவுட் ஆன இந்திய அணி வரலாறு படைத்த நியூசிலாந்துDhanush Aishwarya | ரஜினி வீட்டில் நடந்த மீட்டிங்?இணையும் தனுஷ் ஐஸ்வர்யா குஷியில் சூப்பர் ஸ்டார்!TVK VCK Flag issue | அகற்றப்பட்ட தவெக கொடி   மறியலில் இறங்கிய மக்கள்   களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
ராமதாஸ் போட்ட ஒற்றை ட்வீட்.. ஆடிப்போன தமிழக அரசியல்.. ஒரு வேலை இருக்குமோ?
"அப்பாவை கொன்றவரை நினைச்சு இரக்கப்பட்டவர்" பிரியங்கா காந்தி குறித்து ராகுல் காந்தி உருக்கம்!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
முஸ்லிம் வாக்குகளை குறிவைக்கும் விஜய்.. செயற்குழு கூட்டத்தில் கச்சிதமாக வேலையை முடித்த தவெக!
EPS Slams DMK:
EPS Slams DMK: "2026 வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக அமையும்" - எடப்பாடி பழனிசாமி
"திருவள்ளுவருக்கு வர்ணம் பூசுறாங்க" பாஜகவுக்கு எதிரான ஸ்கெட்ச்.. அடித்து ஆடும் தவெக விஜய்!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின்  26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
TVK Resolution: 2026க்கு அச்சாரம் போடும் தவெகவின் 26 தீர்மானங்கள்: அக்ரசிவ் மோடில் திமுக - பாஜகவை தாக்கிய விஜய்.!
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்:  அப்படி என்ன பேசினார்.?
EPS: முதல்வர் ஸ்டாலினை பாராட்டி, உதயநிதியை தாக்கிய இபிஎஸ்: அப்படி என்ன பேசினார்.?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Suresh Gopi: கோயிலுக்கு ஆம்புலன்சை பயன்படுத்திய பாஜக அமைச்சர்: சுரேஷ் கோபி மீது பாய்ந்த வழக்கு.! நடந்தது என்ன?
Embed widget