TN 10th Supplementary Exam: ஜூலை 4 முதல் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு; மே 22 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
TN 10th Supplementary Exam 2025: 10ஆம் வகுப்புப் பொது தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

10ஆம் வகுப்புத் துணைத் தேர்வு ஜூலை 4ஆம் தேதி அன்று தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10ஆம் வகுப்புப் பொது தேர்வு எழுதிய மாணவர்களின் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. இதில் 93.80% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 8,71,239 மாணவர்கள் தேர்வை எழுதினர். இதில் மாணவியர்களின் எண்ணிக்கை 4,35,119 மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை 4,36,120 ஆகும். இதில் 8,17,261 பேர் தேர்ச்சி பெற்றனர். மீதமுள்ள மாணவர்கள் இந்த கல்வி ஆண்டிலேயே துணைத் தேர்வை எழுதி, தேர்ச்சி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 4ஆம் தேதி முதல் துணைத் தேர்வு
இதன்படி, 10ஆம் வகுப்புத் துணைத் தேர்வு ஜூலை 4ஆம் தேதி அன்று தொடங்கும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தத் தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துணைத் தேர்வுக்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






















