மேலும் அறிய

TN 10th Result 2025: முன்னேறிய தஞ்சை மாவட்டம்... மாநில அளவில் எத்தனையாவது இடம்?

TN SSLC Result 2025: மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 15வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 12வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

TN SSLC Result 2025: தஞ்சாவூர்: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியானது. இதில் தஞ்சாவூர் மாவட்டம் 12-வது இடம் பெற்றுள்ளது. தேர்வு எழுதியவர்களில் 95.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 408 பள்ளிகளைச் சேர்ந்த 29 ஆயிரத்து 275 மாணவ, மாணவிகள் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். இவர்களில் 27 ஆயிரத்து 978 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி விகிதம் 95.57 சதவீதம். இது, கடந்த ஆண்டை விட 2.17 சதவீதம் கூடுதல் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் கடந்த ஆண்டு 15வது இடத்தில் இருந்த நிலையில் தற்போது 12வது இடத்துக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது.

மாவட்டத்தில் தேர்வு எழுதிய 14 ஆயிரத்து 415 மாணவர்களில் 13 ஆயிரத்து 500 பேரும், 14 ஆயிரத்து 860 மாணவிகளில் 14 ஆயிரத்து 478 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களில் 93.65 சதவீதம் பேரும், மாணவிகளில் 97.43 சதவீதம் பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் மாணவிகளின் தேர்ச்சி விகிதம் தான் அதிகரித்துள்ளது.

அரசு பள்ளி அளவில் மாவட்டத்தில் 228 பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதிய மாணவ, மாணவிகளில் 94.14 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம், அரசு பள்ளிகளிலும் மாநில அளவில் தஞ்சாவூர் மாவட்டம் 12வது இடத்தைப் பெற்றுள்ளது. மாவட்டத்தில் 88 அரசு பள்ளிகள் உட்பட மொத்தம் 163 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.

இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் புதுக்கோட்டை மாவட்டம் 93.53 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த தேர்ச்சி கடந்த ஆண்டை விட 1.69 சதவீதம் கூடுதல் தேர்ச்சி ஆகும். மாவட்டத்தில் மொத்தம் உள்ள 335 பள்ளிகளில் 111 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி அடைந்துள்ளது

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 96.46 சதவீதத் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது. இந்த மாவட்டத்தில் தேர்வெழுதிய 7908 பேரில் 7628பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 7வது இடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 94.77 சதவீதத் தேர்ச்சி பெற்றிருந்தது. கடந்த ஆண்டு மாநிலத்தில் 8வது இடம் பெற்றிருந்தது. தற்போது ஒரு இடம் முன்னேறி 7ம் இடம் பிடித்துள்ளது. 141-பள்ளிகளில் 70ள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்று சாதித்துள்ளது.

இதேபோல் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அரியலூர் மாவட்டம் 96.38 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. மாநில அளவில் அரியலூர் மாவட்டம் 8 வது இடம் பெற்றுள்ளது. மேலும் பிளஸ் 1 வகுப்பு தேர்வில் தமிழக அளவில் அரியலூர் மாவட்டம் முதல் இடத்தை பிடித்துள்ளது. அரியலூர் மாவட்டம் 97.76 சதவீத தேர்ச்சி பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.

பிளஸ் 1 வகுப்பு தேர்வில் பெரம்பலூர் மாவட்டம் 92.56 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்த மாவட்டத்தில் 7355 பேர் தேர்வெழுதினர். இதில் 6808 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாநில அளவில் பெரம்பலூர் மாவட்டம் 18வது இடம். கடந்த ஆண்டு 94.82 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது. . கடந்த ஆண்டு மாநிலத்தில் 6வது இடம் பெற்றிருந்தது. 81-பள்ளிகளில் 24 பள்ளிகள் 100 சதவீதத் தேர்ச்சி பெற்றுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget