10th Practical Exam: 10-ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் ஆப்சென்ட்? அதிர்ச்சித் தகவல்
10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாடத்திற்கான செயல்முறைத் தேர்வுக்கான கால அவகாசத்தை வரும் 31ஆம் தேதி வரை நீட்டித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், தேர்வில் பங்கேற்காத மாணவர்கள் நலன் கருதி 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலே குறிப்பிட்ட நாட்களில் செய்முறைத் தேர்வுக்கு வருகை புரியாத அனைத்துப் பள்ளி மாணவர்களும் கலந்துகொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், 10ஆம் வகுப்பு அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் 1 லட்சம் மாணவர்கள் கலந்துகொள்ளவில்லை என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. இதனால்தான் செய்முறைத் தேர்வுக்கான கால அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள்
பொதுத் தேர்வுகள் ஏப்ரல் 6-ஆம் தேதி அன்று தொடங்கி ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுத உள்ளனர். இதற்காக அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட ஹால் டிக்கெட்டை மாணவர்கள் மார்ச் 27ஆம் தேதி முதல் டவுன்லோடு செய்து வருகின்றனர்.
12ஆம் வகுப்புத் தேர்விலும் ஆப்சென்ட்டான மாணவர்கள்
முன்னதாக பிளஸ் 2 மொழிப்பாடத் தேர்வை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இருந்து 50,674 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்தது. தொடர்ந்து ஆங்கிலம், இயற்பியல் தேர்வுகளைக் கணிசமான மாணவர்கள் எழுதவில்லை என்று தகவல் வெளியானது. இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து சட்டப்பேரவையிலும் எதிர்க் கட்சியான அதிமுக கேள்வி எழுப்பியது.
கட்டுப்பாடுகள்
தேர்வு அறையில் செல்போன் கொண்டு செல்வது, ஆள்மாறாட்டம், துண்டுதாள் அல்லது பிற மாணவர்களை பார்த்து எழுதுவது, விடைத்தாள் மாற்றிக்கொள்வது உள்ளிட்ட செயலில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தேர்வு எழுத தடை விதிக்கப்படும். இந்த செயல்களை ஊக்கப்படுத்த நினைத்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 19-ல் தேர்வு முடிவுகள்
12- ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் மே 5 ஆம் தேதி வெளியாக உள்ளன. 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள், மே மாதம் 17ஆம் தேதியும் பிளஸ் 1 தேர்வு முடிவு மே-19 ஆம் தேதியும் வெளியாகும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.