ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு; உடனே விண்ணப்பிங்க- ஜனவரி 5 கடைசி! விவரம்
2025-26ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணைய வழியில் இன்று (24.12.2025) முதல் 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2025- 26ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்வில் (General Counselling) கலந்துகொள்ள 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆண்டுதோறும் பணியிட மாறுதல்
உயர்கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி ஆண்டுதோறும் பணியிட மாறுதல் நடைபெற்று வருகிறது.
2025-26ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இணைய வழியில் இன்று (24.12.2025) முதல் 05.01.2026 வரை விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து உயர்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி, உயர் கல்வித் துறையின் கீழ் உள்ள அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் நலன் கருதி 2025-26ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடத்திட பொது ஆணை இடப்பட்டுள்ளது.
ஜனவரி 5 வரை விண்ணப்பிக்கலாம்
அதன்படி, உயர்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு கலை, அறிவியல், கல்வியியல், பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், நூலகர்கள், உடற்கல்வி இயக்குநர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்களுக்கு 2025-26ஆம் ஆண்டு பணியிட மாறுதலுக்கான பொது கலந்தாய்விற்கு (General Counselling) இன்று (24.12.2025) முதல் 05.01.2026 வரை இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இணையதள முகவரி
இந்த பொது கலந்தாய்வில் கலந்துகொள்ள கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.dcetransfer.in மற்றும் www.nonteaching.dcetransfer.in என்ற தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள பணியாளர்கள் www.tndotetransfer.in என்ற இணையதள முகவரியிலும் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.






















