மேலும் அறிய

TANCET 2023: முதுகலைப் படிப்புகள்; டான்செட் தேர்வுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு- பெறுவது எப்படி?

2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத ஹால் டிக்கெட் நாளை (மார்ச் 11) வெளியாக உள்ளது. 

2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத ஹால் டிக்கெட் நாளை (மார்ச் 11) வெளியாக உள்ளது. 

தமிழகத்தில் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலைப் படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) எழுத வேண்டும். 

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வுகளை எழுத விண்ணப்பப் பதிவு பிப்.22ஆம் தேதிஆம் தேதி வரை நடைபெற்றது. எம்பிஏ படிப்புக்கான தேர்வை எழுத 24, 468 பேரும் எம்சிஏ படிப்புக்கான தேர்வை எழுத 9,820 பேரும் விண்ணப்பித்தனர். தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட்  நாளை வெளியிடப்பட உள்ளது.  

சீட்டா நுழைவுத் தேர்வு அறிமுகம்

எம்இ, எம்டெக், எம்ஆர்க் எனப்படும்  முதுகலை பொறியியல், முதுகலை தொழில்நுட்பம், முதுகலை கட்டிடவியல் மற்றும் முதுகலை திட்டமிடல் (M.E. M.TECH., M.ARCH., M.PLAN) படிப்புகளுக்கு இதுநாள் வரை டான்செட் தேர்வு மூலம் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில், 2023ஆம் ஆண்டில் இருந்து சீட்டா நுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

அதாவது சிஇஇடிஏ எனப்படும் பொது பொறியியல் நுழைவுத் தேர்வு மற்றும் மாணவர் சேர்க்கை (CEETA- COMMON ENGINEERING ENTRANCE TEST AND ADMISSIONS) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தொலைதூரக் கல்வித் திட்டத்தின் மூலம் B.E, B.Tech., Degree தேர்ச்சி பெற்றவர்கள் இந்தத் தேர்வை எழுத முடியாது.இந்தத் தேர்வுக்கு மொத்தம் 4,961 பேர் விண்ணப்பித்துள்ளனர். 

2022 டான்செட் தேர்வு

கடந்த ஆண்டு டான்செட் தேர்வு மே 14ஆம் தேதி நடைபெற்றது. குறிப்பாக எம்சிஏ படிப்பிற்கு மே 14ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை தேர்வு நடைபெற்றது. எம்பிஏ படிப்பிற்கு மே 14-ஆம் தேதி மதியம் 2:30 முதல் மாலை 4:30  மணி வரை தேர்வுகள் நடைபெற்றன. முதுகலை தொழில்நுட்பப் படிப்புகளுக்கான டான்செட் தேர்வு மே 15 அன்று நடைபெற்றது.

2023 டான்செட் தேர்வு தேதி

எம்பிஏ படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி மதியம் 2.30 மணி முதல் 4.30 மணி வரை நடைபெற உள்ளது. எம்சிஏ படிப்புகளுக்கான தேர்வு மார்ச் 25ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ளது. 

CEETA தேர்வு 

எம்இ, எம்டெக், எம்ஆர்க் படிப்புகளுக்கு நடத்தப்பட உள்ள சிஇஇடிஏ தேர்வு அடுத்த நாள் அதாவது மார்ச் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. குறிப்பாக காலை 10 மணி முதல் 12 மணி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 15 நகரங்களில் 40 தேர்வு மையங்களில் நடைபெற உள்ள 2 தேர்வுகளையும் மொத்தத்தில் 39,249 தேர்வர்கள் எழுத உள்ளனர். 

தேர்வர்கள் https://tancet.annauniv.edu/tancet/ என்ற இணைப்பை க்ளிக் செய்து நாளை காலை 11 மணி முதல் ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்யலாம். 

கூடுதல் தகவல்களுக்கு: tanceeta@gmail.com

தொலைபேசி எண்கள்: 044-22358289 / 044-22358314 (10.00 AM to 6.00 PM)

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Profile: ”நான் சொடுக்கு பந்து போடணுமா?”தலையெழுத்தை மாற்றிய COACH நாயகன் அஸ்வினின் கதை..!Rahul gandhi on MP injury: ”ஆமா...தள்ளிவிட்டேன்! என்னையவே தடுக்குறீங்களா?” ஆதாரத்துடன் பேசிய ராகுல்Vijay vs Vck | வாயை திறக்காத விஜய்.. பணிய வைத்த விசிக!ரவுண்டு கட்டும் நெட்டிசன்ஸ்! tvk | vckMLA Inspection : ‘’எல்லாம் அறிவு கெட்டவனா?’’LEFT & RIGHT வாங்கிய MLA திக்குமுக்காடிய அதிகாரிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sunita Williams: சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்?  பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்;  புதிய சிக்கல் என்ன?
சிக்கித்தவிக்கும் சுனிதா வில்லியம்ஸ்? பிப்ரவரியில் பூமி திரும்பமாட்டார்; புதிய சிக்கல் என்ன?
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
எங்க அப்பாவ மன்னிச்சிடுங்க? தந்தையின் பகீர் குற்றச்சாட்டு.. அஸ்வின் மறுப்பு!
Rahul Gandhi: ''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
''ராகுல் காந்தி என்னிடம் தவறாக நடந்துகொண்டார்'' பாஜக பெண் எம்.பி. பகீர் குற்றச்சாட்டு!
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
ஹனிமூனுக்கு அங்க போகக் கூடாது! புது மாப்பிள்ளை மீது ஆசிட் வீச்சு.. மாமனார் வெறிச்செயல்
TN Rain: மழை வருமா, வராதா? ;  தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
மழை வருமா, வராதா? ; தமிழ்நாட்டில் 7 நாட்களில் மழை நிலவரம் எப்படி இருக்கும் தெரியுமா?
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
இது தனி ரூட்... தவெக மாநாடு வசூலில் பதம்பார்த்த லிஸ்டட் நிர்வாகிகள் ; மனஉளைச்சலில் பிற நிர்வாகிகள்...!
"ஒரு ஆணுக்கு இரண்டு மனைவிகள்.. லிவ் இன் ரிலேஷன்ஷிப் தவறு" நிதின் கட்காரி பரபர கருத்து!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Ambedkar Row: என்னதான் நடக்கிறது டெல்லியில்? ஐசியுவில் பாஜக எம்.பி.- காங்கிரஸ் தலைவர் கார்கேவுக்கு காயம்!
Embed widget