மேலும் அறிய

Madurai : ”தமிழி படிக்க எளிமையாக இருந்தது” - பள்ளி மாணவர்கள் தொல்லியலில் அசத்தல் !

தமிழி எழுத்துக்கள் கொண்ட படங்களை பார்க்கும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கண்டிப்பாக நேரில் சென்று பார்க்க வேண்டும் என தோன்றுகிறது - என்றனர்.

பள்ளி மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்திய தமிழி கல்வெட்டு எழுத்துகள், தமிழி கல்வெட்டுப் பயிற்சியில் கல்வெட்டு எழுத்துகள் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது.

பானை ஓடுகளில் உள்ள தமிழி எழுத்துகள்:

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி, சுரேஷ் சுதா அழகன் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி, தொன்மைப் பாதுகாப்பு மன்றம் சார்பில் நடைபெற்ற தமிழி கல்வெட்டுப் பயிற்சியில் கல்வெட்டு எழுத்துகள் மாணவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தின.
 
பயிற்சிக்கு  தலைமையாசிரியர் கோ.மகேந்திரன் கண்ணன் தலைமை தாங்கினார். மன்றச் செயலர் வே.ராஜகுரு,  சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இருந்த தமிழி கல்வெட்டு எழுத்துகளின் சிறப்புகள் பற்றிக்  கூறியதாவது, “பானை ஓடுகள், காசுகள், முத்திரைகள், நடுகற்கள், குகைக் கல்வெட்டுகளில் காணப்படும் தமிழி எழுத்துச் சான்றுகள், தமிழ் மொழியின் தொன்மைக்கு முதன்மைச் சான்றாகும். அசோகர் காலத்துக்கு முன்பே தமிழர் எழுத்தறிவு பெற்றிருந்ததற்கு தமிழ்நாட்டு அகழாய்வுகளில் கிடைக்கும் பானை ஓடுகளில் உள்ள தமிழி எழுத்துகள் ஆதாரமாகும். வணிகப் பெருவழிகளில் உள்ள முக்கிய நகரங்களின் குன்றுகளில் தமிழிக் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை மதுரையில் தான் உள்ளன” என்றார். 
 
 

புறநானூற்றுப் பாடல்களை தமிழி எழுத்தில் எழுத பயிற்சி:

பின்னர் நடந்த பயிற்சியில் திருப்பரங்குன்றம், திருமலை, ஜம்பை உள்ளிட்ட மலைக்குகைகளில் உள்ள தமிழி கல்வெட்டுகளின் படங்கள், அச்சுப்படிகள் மூலம் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொடுத்தார். ஆங்கிலம் உள்ளிட்ட மேற்கத்திய மொழிகளின் எழுத்துகள் தமிழி போல் உள்ளதைக் கண்டு வியந்த மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றுக் கொண்டனர்.
 
புறநானூற்றுப் பாடல்களை தமிழி எழுத்தில் எழுதி பயிற்சி பெற்றனர். கல்வெட்டு பயிற்சி பெற்ற 6-9-ம் வகுப்பு மாணவர்கள் 25 பேருக்கு சான்றிதழ்களை வழங்கி தலைமையாசிரியர் கோ.மகேந்திரன் கண்ணன் பாராட்டினார்.

தமிழி வாசிப்பது எளிமை தான் -  மாணவர்கள் மகிழ்ச்சி

இது குறித்து மாணவர்கள் சிலர் தெரிவிக்கையில்...,” தமிழி எழுத்துகள் குறித்து எங்களுக்கு விழிப்புணர்வும், ஆர்வமும் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் தொன்மையான விடயங்களை அனைவரும் பாதுகாக்க வேண்டும். தமிழி எழுத்துகள் பார்க்கும் போது கடிமாக தெரிந்தது. அதனை வாசிக்க, வாசிக்க சற்று எளிமையானது தான், என தோன்றவைத்துவிட்டது. தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டால் எளிமையாக இதனை கற்றுக் கொள்ளலாம் என தோன்றுகிறது.
 
எங்கள் ஆசிரியர்களை தொந்தரவு செய்தாவது, தமிழி எழுத்துக்களை கற்றுக் கொள்வோம். மதுரை மாவட்டத்தில் உள்ள தமிழி எழுத்துக்கள் கொண்ட படங்களை பார்க்கும்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. கண்டிப்பாக நேரில் சென்று பார்க்க வேண்டும் என தோன்றுகிறது. அச்சுப்படிகள் மூலம் படிக்கவும் எழுதவும் கற்றுக் கொண்டது, மகிழ்ச்சியை தருகிறது” எனவும் தெரிவித்தனர்.
 
 
 
 

தலைப்பு செய்திகள்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
நீட், ஜேஇஇ இருந்தாலும்.. நாடு முழுவதும் உயர்கல்வி சேர்க்கை மையப்படுத்தப்படவில்லை: ஜெகதீஷ் குமார்
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
ITI-யில் சேரும் மாணவர்களுக்கு ஜாக்பாட்.! வேலை கன்பார்ம்- அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
TVK Government: விஜய்யின் 100 நாள் ஆட்சி.. தவெக அரசு அப்படி என்ன செஞ்சுட்டாங்க? பட்டியலை பாருங்க
CM Vijay 100 Days: தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
தவெக விஜய் அரசின் 100 நாட்கள் - எதிர்கொண்ட பிரச்னைகளும் & சர்ச்சைகளும் - புதுசா & தினுசா முழு லிஸ்ட்
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
TN Assembly: ஆட்டம் ஆரம்பம்.. இன்று மீண்டும் கூடும் சட்டமன்றம்! அட்டாக் மோடில் வரும் திமுக.. சமாளிக்குமா தவெக?
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
Seeman:
Seeman: "கொலை கேஸ் போடுங்க.." தமிழனை வேட்டையாடினால் கேட்பதற்கு நாதி இ்ல்லையா? கொந்தளித்த சீமான்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
CM விஜய் ஆவேசம்..! நீங்கள் சொல்வது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை - 3 தமிழர்கள் கொல்லப்பட்ட கொடூரம்
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
சிங்கிள் சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. Avore இ பைக் என்னென்ன இருக்கு? எந்த மாடல் எவ்ளோ விலை?
TN Weather News: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை - சென்னை நிலவரம்..!
Embed widget