(Source: ECI/ABP News/ABP Majha)
Tribal Education | கல்வியறிவில் தமிழகப் பழங்குடியினர் பின்னடைவு: ரவிக்குமார் எம்.பி தெரிவிப்பது என்ன?
பொதுவாக படிப்பறிவு பெற்றோர் சதவீதத்தில் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் பழங்குடியினர் கல்வியறிவு நிலை இப்படி பின்னடைவாக இருப்பது வேதனையளிக்கிறது.
மொத்த படிப்பறிவு பெற்றோர் சதவீதத்தில் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் பழங்குடியினர் கல்வியறிவு நிலை இப்படி பின்னடைவாக இருப்பது வேதனையளிக்கிறது.
இதுகுறித்து விழுப்புரம் எம்.பி.யும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளருமான ரவிக்குமார் மக்களவையில் இன்று பழங்குடியினர் நலத்துறை அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில்,
''(அ) பழங்குடியினப் பெண்களின் கல்வி அறிவு விகிதத்தை அதிகரிக்க அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் எவை?;
(ஆ) 2020 ஆம் ஆண்டில் பழங்குடியின (ST ) கல்வியறிவு குறித்த மாநில வாரியான தரவு விவரங்களைத் தருக;
(இ) பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி ஆகிய இரண்டிலும் பழங்குடி மக்களின் மொத்த சேர்க்கை விகிதம் (GER)என்ன?
(ஈ) ஒட்டுமொத்த மாணவர் சேர்க்கையை (GER) அதிகரிக்க அரசாங்கம் ஏதேனும் சிறப்பு முயற்சிகளை எடுக்கிறதா; மற்றும்
(உ) அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? என்ற கேள்விகளை எழுப்பினேன்.
பழங்குடியின மக்களின் கல்வி நிலையில் இந்திய சராசரியை விட தமிழ்நாட்டின் நிலை குறைவாக இருக்கிறது
— Dr D.Ravikumar M P (@WriterRavikumar) December 13, 2021
நாடாளுமன்றத்தில் இன்று நான் எழுப்பிய கேள்விக்கு இந்திய ஒன்றிய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அளித்த பதிலில் இந்த விவரம் தெரியவந்துள்ளது:
அதற்கு பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அளித்துள்ள எழுத்துபூர்வமான பதிலில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அனைத்திந்திய அளவில் பழங்குடியின ஆண்களின் படிப்பறிவு 59% ஆக இருக்கிறது, பெண்களின் படிப்பறிவு 49.4% ஆக உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பழங்குடியின ஆண்களின் கல்வியறிவு 54.3% ஆகவும், பெண்களின் கல்வியறிவு 46.8% ஆகவும் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆண் கல்வியில் 4.7% ம் பெண் கல்வியில் 2.6% ம் குறைவாக உள்ளது.
பொதுவாக படிப்பறிவு பெற்றோர் சதவீதத்தில் இந்தியாவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும் தமிழ்நாட்டில் பழங்குடியினர் கல்வியறிவு நிலை இப்படி பின்னடைவாக இருப்பது வேதனையளிக்கிறது.
தமிழ்நாட்டில் பழங்குடியினர் கல்வியறிவு சதவீதத்தை உயர்த்தத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புத் திட்டம் ஒன்றை வகுக்கவேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்''.
இவ்வாறு விழுப்புரம் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்