மேலும் அறிய

Tamil Nadu School Reopening: ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ்!

நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிப்பட கூறினார்.

1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும்போது ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியுள்ளார்.

காந்திஜெயந்தியை முன்னிட்டு திருச்சியில் காந்தி புகைப்படத்திற்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், நவம்பர் 1ஆம் தேதி முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கும் முடிவில் எந்தவித மாற்றமும் இல்லை என்று உறுதிப்பட கூறினார்.

மேலும் அமைச்சர் அளித்த பேட்டியில், “1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறக்கும்போது ஒரு வகுப்பறையில் 20 மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். சுழற்சி முறையில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். ஒன்றாம் வகுப்பு மாணவர்கள் வெகுநேரம் முகக்கவசம் அணிய முடியாது என்பதால், அதுகுறித்து பின்னர் அறிவிக்கப்படும். முகக்கவசம் அணிவதில் பிள்ளைகளுக்கு உள்ள கவனத்தை கண்காணிப்போம். பிஞ்சுக்குழந்தைகளின் நலனில் கூடுதல் கவனம் செலுத்தப்படும். முதலில் பிள்ளைகள் பள்ளிக்கு வரட்டும், கட்டுப்பாடுகளை மேம்படுத்துவோம். தமிழ்நாட்டில் 98 சதவீதம் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பள்ளிக்கல்வித்துறை ஊழியர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்” என்று கூறினார்.

முன்னதாக, சில தினங்களுக்கு முன்பு பள்ளி திறப்பு தொடர்பாக சென்னை தலைமைச்செயலகத்தில்  ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகள் திறக்க இன்னும் ஒரு மாதம் இருப்பதால் தேவையான முன்னேற்பாடுகளை செய்ய பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தியதாக கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் கூறுகையில், “ஒரு மாதத்திற்குள் பள்ளிகளை தூய்மைப்படுத்தி முறையாக வைத்திருக்க வேண்டும். பள்ளி மாணவர்கள் நலன் கருதி அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்கள் உடல்நலனில் அக்கறை கொண்டு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ளும். பள்ளிகள் திறக்க ஒருமாத காலமே உள்ள நிலையில் அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பள்ளிக்கு வர உள்ளதால் அனைத்து பள்ளிகளையும் தூய்மையாக பராமரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனிமையில் இருக்கும்போது ஏற்படும் எதிர்மறை எண்ணங்கள் பள்ளி திறப்பால் குறையும். ” என்று கூறினார்.

Tamil Nadu School Reopening: ஒரு வகுப்பறையில் 20 மாணவர்களுக்கு மட்டுமே அனுமதி - அமைச்சர் அன்பில் மகேஷ்!

மாணவர்களுக்கு எப்போது தேர்வு?

மாணவர்களுக்கு எப்போது தேர்வு நடைபெறும் என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தற்போது பள்ளிகளில் சிறுசிறு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள் முழு எண்ணிக்கையில் பள்ளிக்கு வர முடியாத சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் வருகை அதிகரித்தவுடன் தேர்வுகள் நடத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார்.

1 முதல் 5ஆம் வகுப்பு பள்ளிகளை பின்னர் தொடங்கலாம்

முன்னதாக, “6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறந்த பிறகு அடுத்த கட்டமாக 1 முதல் 5ஆம் வகுப்புகளை திறக்க வேண்டும். குழந்தைகள் மனஉளைச்சலில் உள்ளதால் பள்ளிக்கூடம் திறப்பதுதான் சரி” என்று தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் நந்தகுமார் கூறினார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
எல்லாருக்கும் நாங்க கொடுக்கறோம்...எங்களுக்கு யார் கொடுப்பாங்க.? புலம்பும் ட்ரம்ப்.!!
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
‘போனால் போகட்டும்’ - காளியம்மாளுக்கு முழு சுதந்திரம் கொடுத்த சீமான்
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
TNPSC Group 2: நாளை குரூப் 2 மெயின் தேர்வு; இதையெல்லாம் செய்தால் விடைத்தாளே செல்லாது- டிஎன்பிஎஸ்சி எச்சரிக்கை!
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
Karthigai Deepam: கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்! உண்மையை சொன்னானா மகேஷ்? கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கொலை மிரட்டல் விடுத்த கார்த்திக்! உண்மையை சொன்னானா மகேஷ்? கார்த்திகை தீபத்தில் இன்று
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
ரூ.822 கோடி பிராஜெக்ட்! ராயபுரத்திற்கு மாறும் பிராட்வே பஸ்டாண்டு! வரப்போகுது மல்டி மாடல் கட்டிடம்! என்னென்ன வசதிகள்?
Manjummel Boys Making Video: மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
மஞ்சும்மல் பாய்ஸ் ஓராண்டு...பிரமிக்க வைக்கும் குணா குகை மேக்கிங் வீடியோ வெளியீடு...
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
Embed widget