TRUST Exam: மாணவர்களே.. மீண்டும் தேர்வு ஒத்திவைப்பு; அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு
TRUST Exam Scholarship: முன்னதாக 2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி ( சனிக்கிழமை ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. எனினும் மழை காரணமாக தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு TAMIL NADU RURAL STUDENTS TALENT SEARCH EXAMINATION (TRUST) தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ’’01.02.2025 சனிக்கிழமை அன்று நடைபெறுவதாக தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு (TRUST) அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்தத் தேர்வை எழுதும் மாணவர்கள், பாரத சாரணியர் இயக்க வைர விழாவில் கலந்து கொள்கின்றனர்.
இதை முன்னிட்டு டிரஸ்ட் தேர்வு 08.02.2025 சனிக்கிழமை அன்று நடைபெறும்’’ என அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு வரை உதவித் தொகை
9ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ஆண்டுதோறும் ₹1,000 உதவித்தொகை பெற, தலைமை ஆசிரியர்கள் மூலம் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மாவட்டம் தோறும் தேர்ந்தெடுக்கப்படும் 100 மாணவ மாணவியருக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை இத்தொகை வழங்கப்படும்.
ஊரகப் பகுதிகளில் (அதாவது கிராமப்புற பஞ்சாயத்து, நகர பஞ்சாயத்து மறறும் டவுன்சிப்), அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 2024 -2025 கல்வியாண்டில் 9 - ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர் இந்தத் திறனாய்வுத் தேர்வு எழுதுவதற்கு தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
அதே நேரத்தில் நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் படிக்கும் மாணவ / மாணவிகள் இந்தத் தேர்வை எழுத இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.
மீண்டும் தள்ளி வைக்கப்பட்ட தேர்வு
முன்னதாக 2024 டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி ( சனிக்கிழமை ) ஊரகத் திறனாய்வுத் தேர்வு நடைபெறுவதாக இருந்தது. எனினும் மழை காரணமாக தேர்வு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. பிறகு தேர்வு பிப்ரவரி 1ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தற்போது, பிப்ரவரி 8ஆம் தேதி திறனாய்வுத் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் விவரங்களுக்கு: www.dge.tn.gov.in
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

