மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Ramadoss: 7 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லை: அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு அநீதியா? - ராமதாஸ்

7 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு அளிக்காமல் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

7 ஆண்டுகளாகியும் பணி நிலைப்பு அளிக்காமல் அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதியைப் போக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

''தமிழ்நாடு அரசு கல்லூரிகளில் 7 ஆண்டுகளுக்கு முன் பணியில் சேர்ந்த 1,000-க்கும் கூடுதலான உதவி பேராசிரியர்களுக்கு, ஓராண்டில் வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பு ஆணை, இன்று வரை வழங்கப்படவில்லை. கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின் அலட்சியத்தால் உதவி பேராசிரியர்களுக்கு  ஊதியம் மற்றும் பணி நிலை உயர்வு மறுக்கப்பட்டு வருவது நியாயப்படுத்த முடியாத அநீதி ஆகும்.

தமிழக அரசுக்கு சொந்தமான கலை மற்றும் கல்லூரிகளுக்கு 1093 உதவி பேராசிரியர்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை மாதம் நியமிக்கப்பட்டனர். உதவி பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேர்ந்த நாளில் இருந்து ஓராண்டு தகுதி காண் பருவமாக (Probation Period)கருதப்படும். இந்தக் காலத்தில் அவர்களின் கல்விச் சான்றிதழ் சரிபார்ப்பு, கடந்த கால நடத்தைகள், பணித்திறமை ஆகியவை ஆய்வு செய்யப்படும்.

ஓராண்டு தகுதிகாண் பருவம் முடிவடைந்தவுடன், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படும். இந்த நடைமுறைப்படி 2016-ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், மொத்தம் 7 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகும் கூட, 1093 ஆசிரியர்களுக்கும் பணிநிலைப்பு சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை.

பணி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்குமா?

கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படாதது அத்துடன் முடிந்து விடும் பிரச்சினை இல்லை. பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படாததால், அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கு கிடைக்க வேண்டிய எந்த உரிமையும் இன்று வரை வழங்கப்படவில்லை. வழக்கமான தகுதிகளுடன்  உதவிப் பேராசிரியராகப் பணியில் சேருபவர்களுக்கு ஐந்தாவது ஆண்டில் முதலாவது பணிநிலை மற்றும் ரூ.1000 தர ஊதிய உயர்வு வழங்கப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் இரண்டாவது பணி நிலை உயர்வு மற்றும் ஊதிய உயர்வும், அடுத்த 3 ஆண்டுகளில், அதாவது 13-ஆவது ஆண்டில் இணைப் பேராசிரியர் பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால், இன்னும் பணி நிலைப்பு  சான்றிதழே வழங்கப்படாததால் இரு ஆண்டுகளுக்கு முன் கிடைத்திருக்க வேண்டிய பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்கவில்லை. அடுத்த 3 ஆண்டுகளில் இரண்டாவது பணிநிலை உயர்வு மற்றும் தர ஊதிய உயர்வு கிடைக்குமா? என்பதும் மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது.

கல்லூரிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் நடக்கும் குளறுபடிகள்தான் அனைத்து தாமதத்திற்கும், அநீதிக்கும் காரணம் ஆகும். பணியில் சேர்ந்த உதவிப் பேராசிரியர்கள் தங்களது சான்றிதழ்களின் உண்மைத் தன்மையை நிரூபிப்பதற்கான ஆவணங்களை தாக்கல் செய்து விட்டனர். ஆனால், பணியில்  சேர்ந்த பிறகு உயிரிழந்த உதவி பேராசிரியர்கள், நியமிக்கப்பட்ட பிறகும் பணியில் சேராத உதவி பேராசிரியர்கள் ஆகியோரைப் பற்றிய விவரங்களையும் கல்லூரிகளிடமிருந்து இயக்குனர் அலுவலகம் கோருகிறது. இல்லாத உதவி பேராசிரியர்களின் சான்றிதழ்களை கல்லூரி நிர்வாகங்கள் எவ்வாறு வழங்க முடியும்?

Ramadoss: 7 ஆண்டாகியும் பணி நிரந்தரம் இல்லை: அரசுக் கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கு அநீதியா? - ராமதாஸ்

குழப்பங்களுக்கு என்ன காரணம்?

அதுமட்டுமின்றி, 2015-ஆம் ஆண்டில் தேர்வு செய்யப்பட்ட உதவி பேராசிரியர்கள் எவ்வளவு பேர்? பணியில் சேர்ந்தவர்கள் எவ்வளவு பேர்? இப்போது பணியில் இல்லாதவர்கள் எவ்வளவு பேர்? என்பது குறித்த விவரங்கள் கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகத்தில் இல்லை. இதுதான் குழப்பங்களுக்கு காரணம் ஆகும். கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் நினைத்தால், அனைத்து அரசு கல்லூரிகளில் இருந்தும் விவரங்களைப் பெற்று தணிக்கை செய்து இந்த சிக்கலுக்கு தீர்வு காண முடியும். ஆனால், கல்லூரி கல்வி இயக்குனர் அலுவலகம் இன்று வரை அதை செய்யவில்லை. இயக்குனர் அலுவலகத்தின் தவறுக்கு, உதவிப் பேராசிரியர்கள் ஏன் பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் இழக்க வேண்டும்?

2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த பலர் கடந்த சில ஆண்டுகளில் ஓய்வு பெற்று விட்டனர். ஆனால், அவர்களுக்கு பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை என்பதால், அவர்களுக்கு ஓய்வுக்கால பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு உடனடியாக தீர்வு காணப்படவில்லை என்றால், அடுத்த சில ஆண்டுகளில் கிடைக்க வேண்டிய இரண்டாவது பணி நிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் இழக்க வேண்டியிருக்கும். இது அவர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தி விடக்கூடும்.

நிர்வாகத்தின் தரப்பில் நடந்த தவறுக்காக உதவி பேராசிரியர்கள் பாதிக்கப்படுவதை அரசு அனுமதிக்கக் கூடாது. எனவே, 2015-ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த அனைத்து உதவி பேராசிரியர்களுக்கும் உடனடியாக பணி நிலைப்பு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். அதனடிப்படையில், அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணிநிலை உயர்வையும், தர ஊதிய உயர்வையும் உரிய காலத்திலிருந்து கணக்கிட்டு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 : IPL Auction 2025 | சுத்து போட்ட 7 அணிகள்! 2025 IPL-ன் முதல் RTM! பல்ஸை எகிர வைத்த அர்ஷ்தீப் | Arshdeep singhTiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
IPL Auction 2025 LIVE:14 கோடிக்கு கே.எல்.ராகுலை ஏலத்தில் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ்! ஆர்.சி.பி. ரசிகர்கள் ஏமாற்றம்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! எந்த அணிக்கு சென்றார் தெரியுமா?
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL Mega Auction 2025: இன்று ஐபிஎல் மெகா ஏலம் - 10 அணிகள், ரூ.640 கோடி, 577 வீரர்கள், 204 இடங்கள் - யாருக்கு ஜாக்பாட்?
IPL 2025:
IPL 2025: "இங்க நான்தான் குயின்" ஐ.பி.எல். அணிகளின் தலையெழுத்தை எழுதப்போகும் ப்ரீத்தி ஜிந்தா!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
IND vs AUS: ஸ்டார்க்கை செஞ்சுவிட்ட ஜெய்ஸ்வால்! கண்ணீர்விட்ட கம்மின்ஸ்! அப்படி ஒரு அடி!
Embed widget