TNOU B.Ed. Admission: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை., பி.எட். சிறப்பு கல்வி பட்டப்படிப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
TNOU B.Ed., Special Admission: பி.எட். சிறப்பு பட்டப்படிற்கு வரும் 28-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம.
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் பி.எட். சிறப்பு பட்டப்படிற்கு வரும் 20-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பி.எட். சிறப்புக் கல்வி பட்டப்படிப்பை முடிப்பவர்கள் அரசு பொது மற்றும் சிறப்புப் பள்ளிகள், தனியார் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளி என பணியாற்றலாம். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் இந்தப் படிப்பை அரசு மற்றும் இந்திய மறுவாழ்வுக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ள கல்வி மையங்கள் வாயிலாக நடத்தி வருகிறது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகள் பெருமளவில் பயனடைய முடியும்.
2024-ம் ஆண்டிற்கான பி.எட்.,சிறப்பு கல்வி படிப்புக்கான இணையவழி விண்ணப்பப் படிவம் மற்றும் விளக்க கையேடு பல்கலைக்கழலத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ஜனவரி 20-ம் தேதி வரை விண்ணப்பிக்க;லாம்.
இதற்கு விண்ணப்பிக்க தமிழ், ஆங்கிலம், கணிதம், விலங்கியல், வேதியியல், உயிரியல், இயற்பியல், வரலாறு, புவியியல், சமூக அறிவியல், கம்யூட்டர் சயின்ஸ் ஆகிய படிப்புகளில் இளங்கலை பட்டம் பெற்றவர்களும் வணிகவியல், பொருளியல் ஆகிய துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்களும் பி.எட். சிறப்பு படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்தப் படிப்பை 4 அல்லது 5 ஆண்டுகளுக்குள் படித்து முடிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ.500-யும் பட்டியலின/ பழங்குடியின பிரிவினர் ரூ.250/- யும் செலுத்த வேண்டும்.
இந்தப் படிப்பிற்கு ஆன்லைன் நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
ஆன்லைன் நுழைவுத் தேர்வு நடைபெறும் நாள் - 28.01.2023
எப்படி விண்ணப்பிப்பது?
https://www.tnou.ac.in/ - என்ற இணைப்பை க்ளிக் செய்து விண்ணப்ப படிவத்தை தரவிறக்கம் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் நுழைவுத் தேர்வு பாடத்திட்டம்
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?, பி.எட். சிறப்பு பட்டப்படிப்பில் சேருவோர் எத்தனை ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் உள்ளிட்ட தகவல்கள் குறித்த விவரங்களை https://tnou.ac.in/Documents/dec23/B.Ed.Spl.Ed%20Prospectus%20CY-2024.pdf - என்ற இணைப்பை க்ளிக் செய்து காணவும்.
முக்கிய தேதிகள்
ஜனவரி, 28-ம் தேதி நுழைவுத் தேர்வு நடைபெறும்; 31-ம் தேதி நுழைவுத் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும். பிப்ரவரி 8 முதல் 10 வரை மாணவ சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும்.
மேலும் வாசிக்க..