மேலும் அறிய

TNPSC Exams: வழிகாட்டும் டிஆர்பி; டிஎன்பிஎஸ்சி பொறியியல் தேர்வுகளை ஒத்திவையுங்கள்: வலுக்கும் கோரிக்கை!

தேர்வர்களுடன், அரசியல் தலைவர்களும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. தேர்வர்களுடன், அரசியல் தலைவர்களும் தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் காலியாக உள்ள 369 இடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன.

தென் மாவட்டங்களிலும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளிலும் மழை & வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள், அந்த பகுதிகளைச் சேர்ந்த தேர்வர்களை இந்த எழுத்துத் தேர்வுகளுக்கு தயாராக முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளன. இதனால் தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று எதிர்க் கட்சித் தலைவர் ஈபிஎஸ், பாமக தலைவர் அன்புமணி, பாஜக தலைவர் அண்ணாமலை, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு

இதுகுறித்து எதிர்க் கட்சித் தலைவரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறும்போது, ’’மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு, ஜனவரி 7 அன்று நடக்க இருந்த TRB தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு TNPSC ஜனவரி 6,7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வையும் ஒத்தி வைக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கையில், ’’தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால், சென்னை மற்றும் தென் மாவட்ட பாதிப்புகளின் தீவிரத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை. அறிவிக்கப்பட்ட தேதியில் தேர்வை நடத்துவதில் உறுதியாக உள்ளது. அதே நேரத்தில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மழை & வெள்ள பாதிப்புகளின் தீவிரத்தை நன்றாக உணர்ந்து கொண்டு ஜனவரி 7ஆம் தேதி நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் பணிக்கான எழுத்துத் தேர்வுகளை பிப்ரவரி 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்திருக்கிறது. தேர்வர்களின் நலனில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு இருக்கும் அக்கறை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்திற்கு இல்லாதது வருத்தம் அளிக்கிறது.

இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான அடுத்த ஆள்தேர்வு இன்னும் இரு ஆண்டுகளுக்குப் பிறகுதான் நடைபெறும். மழை & வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் தென் மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் இந்தத் தேர்வை சரியாக எழுதாவிட்டால், அடுத்த வாய்ப்புக்காக இன்னும் இரு ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். அதற்குள் பலர் வயது வரம்பை கடந்திருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைக்காது.

இந்தக் காரணங்களையும், மழை & வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு வரும் ஜனவரி 6 மற்றும் 7ஆம் தேதிகளில் நடைபெறவிருக்கும் எழுத்துத் தேர்வுகளை குறைந்தது ஒரு மாதத்திற்கு ஒத்தி வைக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’தமிழ்நாடு அரசு பணியாளர்‌ தேர்வாணையத்தின்‌ ஒருங்கிணைந்த பொறியாளர்‌ பணிக்கான எழுத்து தேர்வு, வரும்‌ ஜனவரி 6, 7 ஆகிய தினங்களில்‌ நடைபெறும்‌ என அறிவிக்கப்பட்டுள்ளது.

துரதிருஷ்டவசமாக, கனமழையாலும்‌ வெள்ளத்தாலும்‌, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும்‌ தென்காசி ஆகிய தென்மாவட்டங்கள்‌ கடுமையாகப்‌ பாதிக்கப்பட்டுள்ளதும்‌, இம்மாவட்டங்களில்‌ இயல்பு நிலை இன்னும்‌ முற்றிலுமாகத்‌ திரும்பவில்லை என்பதும்‌ நாம்‌ அனைவரும்‌ அறிந்ததே.

தென்மாவட்ட இளைஞர்களுக்கு அநீதி

இம்மாவட்டங்களில்‌ உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்கள்‌, தமிழக அரசுப்‌ பணித்‌ தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ளனர்‌. கடந்த மூன்று வார காலமாக, அவர்கள்‌ கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருக்கும்‌ இந்த நிலையில்‌, குறிப்பிட்ட தேர்வுகளை நடத்துவது முறையானதாக இருக்காது என்பதோடு, தென்மாவட்ட இளைஞர்களுக்கு அநீதி இழைப்பதாகவும்‌ அமையும்‌.

ஒருங்கிணைந்த பொறியாளர்‌ பணிக்கான தேர்வுகளை ஒத்திவைக்குமாறு பலமுறை பொதுமக்கள்‌ கோரிக்கை விடுத்தும்‌, இதுவரை அது குறித்த எந்த நடவடிக்கையும்‌எடுக்கப்படவில்லை. இதனால் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்’’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் விசிக தலைவர் தொல் திருமாவளவனும் டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
உசிலம்பட்டி: 5000 மாணவர்களின் புது காலணிகளை தூர தூக்கி வீசிய தலைமையாசிரியர் சஸ்பெண்ட் !
TNPSC Free Coaching : TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
TNPSC தேர்வுக்கு தயாராகுறீங்களா? ஒரு ரூபாய் செலவு இல்லாமல் இலவச பயிற்சி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!
Madurai உசிலம்பட்டி: அரசுப் பள்ளி மாணவர் காலணிகள் குப்பையில் - மர்மம்!
UPSC: குடிமைப்பணி தேர்வு: முறைகேடுகளுக்கு மத்தியில் பலத்த கெடுபிடியுடன் நிறைவு!
UPSC: குடிமைப்பணி தேர்வு: முறைகேடுகளுக்கு மத்தியில் பலத்த கெடுபிடியுடன் நிறைவு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
CM Vijay: பாட்டிக்கு காஸ்ட்லி கண்ணாடியை கிஃப்டா கொடுத்த விஜய்..! என்ன விலை தெரியுமா?
Suriya:
Suriya: "அரிசி மூட்டை அளவு சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டவன்தான் கார்த்தி.." மேடையிலே பகிர்ந்த அண்ணன் சூர்யா!
ஆப்பிள் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.54,000-க்குள் விற்பனையாகும் ஐபோன் 17! எப்படி தெரியுமா?
ஆப்பிள் பிரியர்களுக்கு செம நியூஸ்! ரூ.54,000-க்குள் விற்பனையாகும் ஐபோன் 17! எப்படி தெரியுமா?
உயிருக்குப் போராடிய பெண்... சாப்பிடச் சென்ற மருத்துவர்? சீர்காழியில் பரிதாபம்!
உயிருக்குப் போராடிய பெண்... சாப்பிடச் சென்ற மருத்துவர்? சீர்காழியில் பரிதாபம்!
TN Cabinet Reshuffle : ’தயாராகும் பட்டியல்’ பதவியை இழக்கப்போகும் அமைச்சர்கள் யார், யார் ?
‘மாற்றத்திற்கு தயாராகும் அமைச்சரவை’ HIT லிஸ்டில் இருக்கும் பெயர்கள்..!
JCB வாங்க EMI: வாடகைக்கு விட்டு மாசாமாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- இதோ திட்டம்!
JCB வாங்க EMI: வாடகைக்கு விட்டு மாசாமாசம் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம்- இதோ திட்டம்!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Mettur Dam Opening : ‘கையெடுத்து கும்பிட்ட முதல்வர் விஜய்’ மேட்டூரில் இருந்து காவிரி நீரை திறந்து வைத்தார்…!
Brezza Top Model on EMI: ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மாருதி பிரெஸ்ஸா டாப் மாடலே வாங்கலாம்; EMI எவ்ளோ வரும்னு பாருங்க
ரூ.2 லட்சம் இருக்கா.? அட்டகாசமான மாருதி பிரெஸ்ஸா டாப் மாடலே வாங்கலாம்; EMI எவ்ளோ வரும்னு பாருங்க
Embed widget