TN Higher Education | அனைத்து பல்கலை.களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித்துறை உத்தரவு
பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அனைத்து பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும், உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
![TN Higher Education | அனைத்து பல்கலை.களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித்துறை உத்தரவு Tamil Nadu Higher Education Order modify curriculum in all universities TN Higher Education | அனைத்து பல்கலை.களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க உயர்கல்வித்துறை உத்தரவு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/22/dba6316169576e7e96d076e231c649fb_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பல்கலைக்கழகங்களின் பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க அனைத்து பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும், உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் சார்பில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாநிலப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்களுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
''தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வகையான பல்கலைக்கழகங்களிலும் தற்போது நடைமுறையில் இருந்து வரும் பாடத்திட்டத்தை இன்றைய காலத்துக்கு ஏற்ற வகையில் புதுப்பித்து மாற்றி அமைக்கவேண்டும்.
மின்னணு கற்றல் முறையை அளிக்கும் கற்பித்தல் மேலாண்மைத் திட்டத்தைப் பல்கலைக்கழகங்கள் அமல்படுத்த வேண்டும் என்று பதிவாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. காணொலி வழிக்கற்றல், விவாதித்தல் வகைக் கற்றல் உள்ளிட்ட கலந்துரையாடல் அம்சங்களை மாணவர்களுக்கு அளிக்க வேண்டும்.
மின் ஆளுமையைக் கல்வியியல் ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் அமல்படுத்த வேண்டும்.
#BREAKING | பல்கலைக்கழங்களின் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க பதிவாளர்களுக்கு உயர்கல்வித்துறை உத்தரவுhttps://t.co/wupaoCQKa2 | #University | #TNGovt | #highereducation pic.twitter.com/SFMtGgEWjD
— ABP Nadu (@abpnadu) January 8, 2022
தமிழ்நாட்டு பல்கலைக்கழகங்களை தேசிய, சர்வதேச தரவரிசையில் இடம்பெறச்செய்யும் வகையிலும், மாணவர்களின் திறனை மேம்படுத்தும் வகையிலும் பாடத்திட்ட மாற்றம் அமைய வேண்டும். பாடத்திட்டத்தை மாற்றிய பின் கணிதம், புள்ளியியல் மற்றும் தமிழ் இலக்கியம் பாடங்களை மட்டும் ஆய்வுக்காக அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்''.
இவ்வாறு பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தேசிய கல்விக்கொள்கைக்கு பதில் மாநில அளவிலான கல்விக்கொள்கை உருவாக்கப்படும் என்று திமுக அரசு அறிவித்துள்ள நிலையில், பாடத்திட்ட மாற்றம் பல்வேறு கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க: Corona Third Wave | 3-வது அலையில் சுனாமி வேகம்... கவலை அளிக்கும் புள்ளிவிவரங்கள்.. கொரோனாவைத் தவிர்ப்பது எப்படி?
இதையும் வாசிக்கலாம்: UPSC Question | யுபிஎஸ்சி மெயின் தேர்வு கேள்விகளால் இணையத்தில் தெறித்த மீம்கள்- என்ன காரணம்?
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)