மேலும் அறிய

TN 12th Result 2026: வெளியானது 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள்.. 95.2 சதவிகிதம் பேர் தேர்ச்சி!

Tamil Nadu 12th Result 2026: சுமார் 8.27 லட்சம் பேர் எழுதியிருந்த 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ளது. மாணவர்கள் இணையதளம், வாட்ஸ்அப் வாயிலாக இதனை தெரிந்துக் கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழ்நாட்டில் உயர்கல்வி பயில்வதற்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. இப்படியான நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடத்தப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடப்பாண்டு சுமார் 8.27 லட்சம் பேர் எழுதியிருந்தனர். கடந்த மார்ச் 2ம் தேதி முதல் மார்ச் 26ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 3,412 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது.

இந்த நிலையில் மே 8ம் தேதி 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நடைபெற்றதால் அரசின் ஒப்புதல் தேவை, அதனால் தேர்வு முடிவுகள் வெளியாவது தள்ளிப்போகும் என தகவல் வெளியானது. ஆனால் திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. 

இந்த தேர்வு முடிவுகளை tnresults.nic.in, dge.tn.gov.in ஆகிய இணையத்தளங்கள் வாயிலாக தேர்வு எழுதிய மாணவ, மாணவியர்கள் ங்கள் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பயன்படுத்தி முடிவுகளை தெரிந்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மாணவர்கள் பள்ளியில் பதிவு செய்துள்ள செல்போன் எண்ணிற்கு தேர்வு முடிவுகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  முதன்முறையாக வாட்ஸ்அப் மூலமும் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ள பள்ளிக்கல்வித்துறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தேர்வில் ஈரோடு மாவட்டம் 98.87% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, திருச்சி ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றிருக்கிறது. பாடம் வாரியாக பார்த்தபோது, அதிகபட்சமாக 6,945 பேர் கணினி அறிவியல் பாடத்தில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 13, 2026 முதல் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்திற்கு ரூ.275 கட்டணம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. மறுகூட்டல், மறுமதிப்பீடு செய்ய ஜூன் 5 முதல் ஜூன் 8 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தலைப்பு செய்திகள்

Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
TNPSC குரூப் 2 அரசு வேலை பெற சூப்பர் பிளான்! இலவச TNPSC பயிற்சி வகுப்புகள் தொடக்கம்!
Education Secretary: நியமிக்கப்பட்ட 17 நாட்களில் கல்வித்துறை செயலாளர் ட்ரான்ஸ்ஃபர் - ஏன்? யார் இந்த தீப்தி கவுர்?
நியமிக்கப்பட்ட 17 நாட்களில் கல்வித்துறை செயலாளர் ட்ரான்ஸ்ஃபர் - ஏன்? யார் இந்த தீப்தி கவுர்?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
Hero EV bike: ஓலா, பஜாஜுக்கு போட்டி? ஹீரோவின் முதல் இ.வி.பைக்- எலக்ட்ரிக் சந்தையில் பெரும் புரட்சி!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Independence Day 2026 Speech: சுதந்திர தினம்; மாணவர்கள் பள்ளி பேச்சுப்போட்டிகளில் கலந்துகொள்ள டிப்ஸ்! உரை
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
ஜம்முனு ரோட்ல போகனுமா.. டேங்கை நிரப்பினா 390 கி.மீட்டர் மைலேஜ்! Triumph Speed T4 பைக் வாங்கலாமா?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
Tata Nexon EMI Plan: உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
உங்களால ரூ.13,000 EMI கட்ட முடியுமா.? அப்படின்னா, கெத்தான நெக்ஸான் கார உங்களுக்கு சொந்தமாக்கலாம்
Embed widget