மாம்பழம் சாப்பிடுவதற்கு முன் தண்ணீரில் ஊறவைக்க வேண்டுமா?

Published by: பேச்சி ஆவுடையப்பன்

மாம்பழத்தை ஊறவைத்தால் அதன் மேல் உள்ள அழுக்குகள் நீங்கும்

மாங்காயில் உள்ள பைடிக் அமிலம் குறைந்து, ஊட்டச்சத்துக்கள் நமக்கு கிடைக்கும்

பலர் மாம்பழத்தை சூடான பழமாக கருதுகிறார்கள். தண்ணீரில் ஊறவைப்பதால் அதன் வெப்பம் குறையலாம்

மாம்பழம் சாப்பிடுவதால் முகப்பரு மற்றும் தோல் பிரச்சனைகள் குறையும் வாய்ப்பு உள்ளது.

சிலருக்கு மாம்பழத்தில் உள்ள பால் போன்ற திரவம் காரணமாக ஒவ்வாமை ஏற்படுகிறது. ஊறவைப்பதன் மூலம் இது குறையும்.

ஊறவைத்த மாம்பழம் சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும். பிரச்சனைகள் இருக்காது.

மாம்பழத்தில் இருக்கும் கெட்டியான பால் தண்ணீரில் ஊறவைப்பதால் நீங்கிவிடும்.

மாம்பழங்களை நன்கு கழுவி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரப்பி போட வேண்டும்

குறைந்தது 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை ஊறவைத்து பின் சாப்பிடலாம்