Public Exam Time Table: வெளியானது 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்: முழு அட்டவணை இதோ!
Public Exam Time Table 2024: 2023-24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் அட்டவணை இன்று வெளியாகி உள்ளது.
![Public Exam Time Table: வெளியானது 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்: முழு அட்டவணை இதோ! Tamil Nadu 10th 11th 12th Public Exam Time Table 2024 Released today Nov 16th Public Exam Time Table: வெளியானது 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள்: முழு அட்டவணை இதோ!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/11/16/7255833c66aaa29ae59678ffbbc29dd71700107356680332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
2023-24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் அட்டவணை இன்று வெளியாகி உள்ளது.
அட்டவணையை சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றானண்டு நூலக கட்டிட வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
கொரோனா பாதிப்பில்லாத கடந்த கல்வி ஆண்டு
2022- 23 ஆம் கல்வி ஆண்டு எந்த தாமதமும் இல்லாமல் ஜூன் மாதம் தொடங்கியது. இவர்களுக்கான தேர்வுகள் வழக்கம்போல் மார்ச் மாதம் தொடங்கி நடைபெற்றன. குறிப்பாக மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 3 வரை 12ஆம் வகுப்புத் தேர்வு நடைபெற்றது. 7,600 பள்ளிகளில், 8.8 லட்சம் மாணவர்கள் 12ஆம் வகுப்புத் தேர்வை எழுதினர்.
11ஆம் வகுப்புத் தேர்வை 8.5 லட்சம் மாணவர்கள் எழுதினர். மார்ச் 14ஆம் தேதி இவர்களுக்குத் தேர்வு தொடங்கி, ஏப்ரல் 5ஆம் தேதி வரை தேர்வு நடைபெற்றது. 10ஆம் வகுப்புத் தேர்வுகள் ஏப்ரல் 6ஆம் தேதி அன்று தொடங்கி, 20ஆம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 10 லட்சம் மாணவர்கள் இந்தத் தேர்வை எழுதினர்.
இந்த நிலையில், 2023-24ஆம் கல்வி ஆண்டில் படிக்கும் 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்னும் அட்டவணை இன்று வெளியாகி உள்ளது.
தேர்வு தேதிகள் அறிவிப்பு
இதன்படி, பிப்ரவரி 23 முதல் 29ஆம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன. இவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மார்ச் 1 முதல் 22ஆம் தேதி வரை 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளன. மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 4 முதல் 25ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.
மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு, முன்கூட்டியே தேர்வு நடைபெற உள்ளது. கடந்த ஆண்டைக் காட்டிலும் சுமார் 10 நாட்கள் முன்னதாக தேர்வு நடைபெற உள்ளது.
தேர்வு முடிவுகள் எப்போது?
மே 6ஆம் தேதி 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன. அதேபோல மே 10ஆம் தேதி 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: 12th Public Exam Time Table: மார்ச் 1 முதல் 22 வரை: பிளஸ் 2 பொதுத்தேர்வு தேதிகள் இவைதான்- அட்டவணையோடு!
இதையும் வாசிக்கலாம்: 10th Public Exam Time Table: மார்ச் 26 - ஏப்.8: 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் எப்போது?- தேதிவாரியாக முழு அட்டவணை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)