சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்விக்கடன்: TAMCO வழங்கும் வாய்ப்பு! விண்ணப்பிப்பது எப்படி?
தமிழக சிறுபான்மையினர் மாணவர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் கல்விக்கடன் பெறும் வசதியை தமிழக அரசு ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்படும் "தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் (TAMCO)" மூலம், தமிழக சிறுபான்மையினர் மாணவர்கள், அரசு அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சி, பட்ட மற்றும் பின் பட்டப்படிப்பு போன்றவற்றிற்காக கல்விக்கடன் பெறும் வசதியை ஏற்படுத்தியுள்ளது.
முக்கியக் கடன்கள்:
-
சேமிப்பு கணக்கு/பதிவுத்தகுதி கட்டணம்
-
புத்தகம், பயணச் செலவு மற்றும் பிற தேவைகள்
-
விடுதி கட்டணம்
-
வீடு மற்றும் உணவு கட்டணம் (விடுதியில் தங்கும் மாணவர்களுக்கு மட்டும்)
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்:
-
தகுதியான சமூகத்தைச் சேர்ந்ததற்கான சான்று (சிறுபான்மையினர் சான்று)
-
வருமானச் சான்று
-
முகவரி நிரூபணம்
-
கல்வி சான்றுகள் (Bonafide Certificate)
-
அட்மிஷன் சான்றிதழ்
-
கல்விக்கடன் செலுத்திய ரசீது (Original)
-
மாணவர் சுயவிவரம்
-
வங்கிக் கணக்கு விவரங்கள்
விண்ணப்பிக்கும் இடம்:
மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவகம் / நகராட்சி வங்கிகள் / கூட்டுறவுத் தொண்டு வங்கிகள் மற்றும் அவற்றின் கிளைகள்.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம்(TAMCO) மூலம் கல்வி கடன் திட்டம்@CMOTamilnadu @mkstalin @Udhaystalin @mp_saminathan @Avadi_Nasar #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/pyDvbXP5ZB
— TN DIPR (@TNDIPRNEWS) August 7, 2025
கல்விக்கடன் திட்ட விவரங்கள்:
| விவரம் | திட்டம் 1 | திட்டம் 2 |
|---|---|---|
| கடனளவு | ₹3 லட்சம் வரை | ₹4 லட்சம் வரை (இந்தியாவில்), ₹6 லட்சம் வரை (வெளிநாடு) |
| பயிலும் துறை | தொழில்நுட்ப/வேலைவாய்ப்பு/தொழிற்பயிற்சி | பட்ட/பின் பட்ட/தரநிலை பயிற்சி |
| சலுகை | ஆண்டு வட்டி 3% | படிப்பு முடித்து 6 மாதங்களுக்கு பிறகு தொடங்கும் திருப்பிச் செலுத்தல் |
| வட்டி விகிதம் | ஆண்டு வட்டி 3% | ஆண்டுக்கு 4% - 5% வரை |
இந்த திட்டம் மாணவர்கள் கல்வி பயணத்தில் பொருளாதார சிக்கல்களால் இடையூறு ஏற்படாமல் தடுக்க சிறந்த முயற்சியாக பார்க்கப்படுகிறது. அரசு வழங்கும் இந்த நிவாரணத்திட்டம் மூலம், சிறுபான்மையினர் சமூக மாணவர்கள் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவல்களுக்கு: https://www.tn.gov.in






















