மேலும் அறிய

அரசுப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் என்பது நகைச்சுவை: வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்க- ராமதாஸ்

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பதுதான் இயற்கை விதியாகும்.

அரசுப்பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் என்பது நகைச்சுவை எனவும் வகுப்புக்கு ஓர் ஆசிரியரை உறுதி செய்ய வேண்டும் எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

’’தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் தேவைக்கும் கூடுதலாக 2236 இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதாக தொடக்கக் கல்வி இயக்குனர் கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக எண்ணிக்கையில் ஓராசிரியர் பள்ளிகள் இருக்கும் நிலையில், அதை சரி செய்யாமல் ஆசிரியர்கள் மாணவர்கள் விகிதத்தை செயற்கையாக குறைத்துக் காட்டி, இருக்கும் ஆசிரியர்களையும் வேறு பள்ளிகளுக்கு மாற்றுவது ஏற்கனவே நலிவடைந்த நிலையிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு மூடுவிழா நடத்துவதற்கே வழி வகுக்கும்.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் தொடக்கப் பள்ளிகளில் 1:19 என்ற அளவிலும், நடுநிலைப் பள்ளிகளில் 1:21, உயர்நிலைப் பள்ளிகளில் 1:22, மேல்நிலைப் பள்ளிகளில் 1:30 என்ற அளவிலும் இருப்பதாக தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. இந்த புள்ளிவிவரங்களைப் பார்த்தால் தமிழக அரசு பள்ளிகளில் ஆசிரியர், மாணவர் விகிதம் ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக இருப்பதாகத் தோன்றும். ஆனால், இவை அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட, உண்மைக்கு மாறான புள்ளிவிவரங்கள் ஆகும். அரசு பள்ளிகளின் வளர்ச்சிக்கு இது எந்த வகையிலும் உதவாது.

மாநில அளவில் கணக்கிடப்படும் விகிதம்

தொடக்கப் பள்ளிகளில் 19 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருந்தால் அது அரசு - பள்ளி மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு பெருமளவில் பங்களிக்கும். ஆனால், உண்மை நிலை அதுவல்ல. ஆசிரியர்கள், மாணவர்கள் விகிதம் வகுப்பறை அளவில் கணக்கிடப்பட வேண்டும். அதாவது, ஆசிரியர், மாணவர் விகிதம் 1:20 என்றால், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வரை இருந்தால் ஓர் ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும். அதற்கும் கூடுதலாக இருந்தால் அந்த வகுப்பு இரண்டாக பிரித்து இரு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாநில அளவில்தான் இந்த விகிதம் கணக்கிடப்படுகிறது. தொடக்கப்பள்ளிகளின் ஆசிரியர், மாணவர் விகிதம் 1:19 என்றால், தமிழ்நாட்டில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் 10,000 பேர் இருந்தால், 1.90 லட்சம் மாணவர்கள் படிக்கிறார்கள். இது சரியல்ல. இத்தகைய ஆசிரியர், மாணவர்கள் விகிதத்தில் தரமான கல்வியை வழங்குவது சாத்தியமல்ல.

தமிழக அரசு வகுத்துள்ள ஆசிரியர், மாணவர் விகிதத்தின்படி, ஒரு தொடக்கப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிலும் தலா 7 மாணவர்கள் இருப்பதாக வைத்துக் கொண்டால், அந்தப் பள்ளிக்கு இரு ஆசிரியர்கள் மட்டுமே வழங்கப்படுவார்கள். மூன்றாவது ஆசிரியரோ, நான்காவது ஆசிரியரோ இருந்தால் அவர்கள் உபரியாகக் கருதி வேறு பள்ளிகளுக்கு மாற்றப்படுவர்.

என்ன நியாயம்?

ஒரு வகுப்பில் ஒரு மாணவர் இருந்தாலும், அவருக்கு கற்பிக்க ஓர் ஆசிரியர் இருக்க வேண்டும் என்பதுதான் இயற்கை விதியாகும். ஆனால், ஐந்து வகுப்புகளில் 19 மாணவர்கள் இருந்தால் ஒரே ஒரு ஆசிரியரும், 38 அல்லது அதற்கும் குறைவான மாணவர்கள் இருந்தால் இரு ஆசிரியரும் மட்டுமே நியமிக்கப்படுவார்கள் என்பது என்ன நியாயம்? 5 வகுப்புகளை ஓர் ஆசிரியரோ அல்லது இரு ஆசிரியர்களோ கவனித்துக் கொள்ள வேண்டும் என்றால் அவர்களால் மாணவர்களுக்கு எவ்வாறு கற்பிக்க முடியும்?

தமிழக அரசின் தொடக்கக் கல்வித்துறை கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தமிழ்நாட்டில் தொடக்கக் கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் 22,831 தொடக்கப் பள்ளிகள், 6587 நடுநிலைப் பள்ளிகள் என மொத்தம் 29,418 பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கை 69,640 மட்டும் தான். இந்த பள்ளிகளில் வகுப்புக்கு ஒரே ஒரு பிரிவு என்று வைத்துக் கொண்டால் கூட மொத்தம் 1,66,851 வகுப்புகள் இருக்கக்கூடும். அதன்படி பார்த்தால் 97,211 வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் இல்லை. இதுவும் கூட இரு ஆண்டுகளுக்கு முந்தைய நிலவரம் தான். இப்போது ஆசிரியர் இல்லாத வகுப்புகளின் எண்ணிக்கை ஒரு லட்சத்திற்கும் கூடுதலாக இருக்கும். உண்மை நிலை இவ்வாறு இருக்க 2236 ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாகக் கூறுவது கேலிக்கூத்து.

புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகளை கட்டுவதற்காக ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இரு ஆண்டுகள் ஆகியும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய வகுப்பறைகள் கட்டப்படவில்லை.

அரசு பள்ளிகளை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் உண்மையாகவே தமிழக அரசுக்கு இருக்குமானால், அரசு பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகளை உடனடியாக வலுப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் உபரியாக இருப்பதாக பொய்க்கணக்கு காட்டுவதை விடுத்து வகுப்புக்கு குறைந்தது ஓர் ஆசிரியரை நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget