மேலும் அறிய

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4 லட்சமாக இருந்த நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை தற்போது மேலும் 6 லட்சமாக அதிகரித்துள்ளது.

திருச்செந்தூர்  அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி  தனது குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தார்.  

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம்  கூறும்போது, "தமிழகத்தில் தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாகி வருவதால்  பள்ளி மாணவர்களுக்கு கோடை விடு முறை விடப்படுவது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். கொரோனா ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் சீராக  இயங்காததால், பாடத்திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டிய இருப்பதை கருத்தில் கொண்டும் இந்த அறிவிப்பு செயல்படுத்தப்பட உள்ளது.  பள்ளிகளில் ஆசிரியர்கள்  மற்றும் மாணவர்களுக்கு இடையேயான மோதல் போக்கு அதிகரித்து வந்தபடி இருக்கிறது.   சாதிக்கயிறு கட்டுதல், பேருந்துகளில் படிகளில் தொங்கிச் செல்லுதல், ஆசிரியர்களை மிரட்டுதல் போன்ற ஒழுங்கீனச் செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருவது மிகுந்த வேதனை அளிக்கிறது.  

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

ஊரடங்கு காலத்தில் பள்ளிகள் இயங்காததால்  மாணவர்கள் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.  தங்களின் வீடு மற்றும் சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளால் கவரப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிகள் திறந்தவுடனும்  அது பிரதிபலிப்பதால் இதுமாதிரியான விரும்பத்தாகாத சம்பவங்கள் நடந்து வருகிறது. பள்ளிகல்வித்துறை அமைச்சராக மாணவர்களிடம் நான் வைக்கும் ஒரே வேண்டுகோள்,    முதல்வர் சொன்னது போல் உங்களது கவனத்தை படிப்பில் மட்டும்தான் நீங்கள் செலுத்தவேண்டும்.   இது போன்று  மாணவர்கள் நடந்து கொள்ளும்போது,  அதனை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்தும்  ஆசிரியர்களுக்கு  அறிவிக்கப்படும்.  அதே நேரத்தில்,  மாணவர்கள் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடாதவாறு கவுன்சிலிங்  வழங்கப்படும்.

பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் அன்பில் மகேஷ்

இதனைத் தடுப்பதற்கு  முதல்வரின் ஆலோசனையின் பேரில் பள்ளி மாணவர்களின் மனதை ஒருமுகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.  குறிப்பாக மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான  மாணவர்களுக்கு அவர்களின் படைப்பாற்றலை வெளிக் கொணரும்  வகையில் ஊஞ்சல் என்ற இதழும்  ஆறு  முதல் ஒன்பதாம் வகுப்பு  வரையிலான மாணவர்களுக்கு தேன் சிட்டு என்ற இதழும் மற்றும் ஆசிரியர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையில் கனவு ஆசிரியர்  என்ற  இதழும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

அத்துடன்,  ஆசிரியர் மற்றும் மாணவர்களின் மனநிலையை ஒருங்கிணைக்க பள்ளி கல்வித்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.   பள்ளிமேலாண்மைக்  குழு மூலம் பெற்றோர்களுடன் கலந்து ஆலோசித்து தீர்வு காணவும் முடிவு எடுக்கப்பட கூடிய கட்டாயம் பள்ளி மேலாண்மை குழுவிற்கு உள்ளது.  ஏற்கெனவே அரசுப் பள்ளியில் பயிலும்  மாணவர்களின்  எண்ணிக்கை  4 லட்சமாக  இருந்த நிலையில், மாணவர்களின் எண்ணிக்கை  தற்போது மேலும் 6 லட்சமாக அதிகரித்துள்ளது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
அயலக தமிழர்களுக்கு புதிய திட்டம் - அசத்தல் அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின் 
Embed widget