மேலும் அறிய

SSC MTS Notification: 11 ஆயிரம் காலி இடங்களுக்கான எஸ்.எஸ்.சி தேர்வு; தமிழில் எழுத அனுமதி..

11 ஆயிரத்து 409 காலி இடங்களுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.

11 ஆயிரத்து 409 காலி இடங்களுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது.

மத்திய ஆட்சேர்ப்பு முகமை சார்பில், மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள் மற்றும் அலுவலகங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தேசிய அளவிலான தேர்வு மூலம் இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. 

இந்த நிலையில், எஸ்எஸ்சி எம்டிஎஸ் (Multi Tasking  Staff) தேர்வு மற்றும் ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பப் பதிவு நேற்று (ஜனவரி 18) தொடங்கி உள்ளது. இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 17ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம். 

கடந்த ஆண்டு இரண்டு கட்டங்களாக நடைபெற்ற தேர்வில், விரித்து எழுதும் வகையிலான தேர்வை எழுத தமிழ் உள்ளிட்ட அட்டவணை மொழிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும் முதல்கட்டமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடைபெற்றது. 

இந்த நிலையில் 2022ஆம் ஆண்டுக்கான எஸ்எஸ்சி எம்டிஎஸ் தேர்வை தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் எழுத, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுமதி அளித்துள்ளது. இவை தவிர்த்து ஆங்கிலம் மற்றும் இந்தியிலும் தேர்வு நடைபெற உள்ளது. இந்தத் தேர்வின் மூலம் 11 ஆயிரத்து 409 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. 

இரண்டு கட்டமாக நடைபெற உள்ள தேர்வில் முதல்கட்டத் தேர்வில் எண் மற்றும் கணித திறன், பகுத்தறியும் திறன் மற்றும் சிக்கல் தீர்ப்பது குறித்து கேள்விகள் கேட்கப்படும். இரண்டாம் கட்டத் தேர்வில் பொது அறிவு, ஆங்கில மொழி மற்றும் புரிதல் கேள்விகள் கேட்கப்படும்.

முதல்கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. அதே நேரத்தில் 2ஆவது கட்டத் தேர்வுக்கு எதிர்மறை மதிப்பெண்கள் எதுவும் கிடையாது. 

ஹவில்தார் பணியிடங்களை நிரப்ப, உடல் தகுதித் தேர்வும் ( Physical Efficiency Test ) நடத்தப்படும். 

தேர்வர்கள் ssc.nic.in என்ற இணைய தளத்தை க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும். 

காலிப் பணியிடங்கள்

பல் துறை சார் பணியாளர்கள்- 10,880 பணியிடங்கள் (தோராயமாக)
ஹவில்தார் - 529 பணியிடங்கள்

கூடுதல் விவரங்களுக்கு: https://ssc.nic.in/SSCFileServer/PortalManagement/UploadedFiles/notice_mts_18012023.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
அரசு பள்ளிகளை அழிக்க சதி? தமிழ்நாட்டில் கல்வி நிதி ஒதுக்கீடு 25 ஆண்டுகளில் 1/3 பங்காக சரிவு
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
எளிய சோதனைகள் மூலம் தேவகோட்டை மாணவர்களுக்கு அறிவியல் ஆர்வம்!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget