SSC CGL Exam Date: எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வு தேதி அறிவிப்பு... முழு விவரம் இதோ...
SSC CGL Exam Date: எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வுக்கான தேதி அதிகாரப்பூர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
SSC CGL Exam Date: உதவி தணிக்கை அதிகாரி, உதவி கணக்கு அதிகாரி, இளநிலை புள்ளியல் அதிகாரி உள்ளிட்ட பதவிகளுக்கு நடக்கும் எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வுக்கான தேதி மற்றும் அட்டவணை வெளியாகி உள்ளது. எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வு டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 13-ஆம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ எனும் இணையதளம் மூலம் முழு விவரத்தை தெரிந்து கொள்ளலாம். தேர்வு நாள் தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்பு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் தேர்வு தேதிகள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல் நிலை தேர்வு டிசம்பவர் 1-ஆம் தேதி தொடங்கி டிசம்பவர் 13-ஆம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு: https://ssc.nic.in/
எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் தேர்வு விவரம்
பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் தேர்வு முதல்நிலைத் மற்றும் அடுக்கு-2 என இரண்டு அடுக்குகளில் நடத்துகிறது. முதல்நிலைத் தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகிறது. அடுக்கு -1 என்பது புறநிலை வகை மற்றும் அடுக்கு-2 தேர்வு 3 கட்டடங்களாக நடத்தப்படும். அதாவது தாள்-1, தாள்-2 மற்றும் தாள்-3 என நடத்தப்படுகிறது.
எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வு 100 கேள்விகளை கொண்டுள்ளது. அதிகபட்ச மதிப்பெண் 200. எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வுக்கு 60 நிமிடங்கள் ஆகும். எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வு நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 25 கேள்விகள் மற்றும் அதகப்பட்ச மதிப்பெண்கள் 50 ஆகும். ஒவ்வொரு தவறான கேள்விக்கும் 0.50 மதிப்பெண் குறைக்கப்படும்.
கேள்வி பிரிவுகள்
பொது நுண்ணறிவு மற்றும் பகுத்தறிவு( General Intelligence and Reasoning) - 25 கேள்விகள்
பொது அறிவு (General awarness) - 25 கேள்விகள்
அளவு தகுதி (Quantitative aptitude) - 25 கேள்விகள்
ஆங்கில பிரிவு (English Comprehension) - 25 கேள்விகள்
மேலும் எஸ்.எஸ்.சி சி.ஜி.எல் முதல்நிலைத் தேர்வு தொடங்குவதற்கு நான்கு நாட்கள் முன்பு ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.