மேலும் அறிய

Anna University: ஆசிரியர் இல்லாமலேயே தேர்வு; அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி- திமுக அரசின் துரோகம் அம்பலமா?

அண்ணா பல்கலை: பொறியியல் மாணவர்களுக்கு தமிழ் பாடம் நடத்த ஆசிரியர் நியமனம் செய்யப்படாததற்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை  திமுக அரசு  உடனடியாக நியமிக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ‘’சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் முதலாமாண்டு பொறியியல் படிப்பில் தமிழரும் தொழில்நுட்பமும் என்ற பாடத்தைக் கற்பிப்பதற்கு உதவிப் பேராசிரியர்கள் ஒருவர் கூட இல்லை. ஆசிரியர்களே இல்லாத நிலையில், இன்று தொடங்கியுள்ள அகமதிப்பெண் தேர்வுகளில் தமிழ்ப் பாடத்தை படிக்காமலேயே தேர்வு எழுத வேண்டிய நிலைக்கு மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்களைக் கூட நியமிக்காமல் உயர் கல்வியை திமுக அரசு சீரழித்து வருவது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில்  பொறியியல் கல்லூரிகளில் தமிழை அறிமுகம் செய்வதாகக் கூறிய திமுக அரசு, முதலாமாண்டு மாணவர்கள் தமிழ் படிப்பதை  2021-22ஆம் ஆண்டில் கட்டாயமாக்கியது.  பொறியியல் படிப்பில்  தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கிய திமுக அரசு, அதற்காக ஒரே ஒரு ஆசிரியரைக் கூட நியமிக்கவில்லை.

அதற்கு எதிர்ப்பு  எழுந்ததைத்  தொடர்ந்து தமிழ் உள்ளிட்ட பாடங்களை நடத்துவதற்காக  328 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களின் ஒப்பந்தக் காலம் முடிவடைந்து விட்டதாகக் கூறி கடந்த டிசம்பர் மாதம் அவர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். அதனால், கடந்த இரு மாதங்களாக பொறியியல் மாணவர்களுக்கு தமிழ்ப் பாடம் நடத்தப்படவில்லை.

துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை

1965-ஆம் ஆண்டில் தமிழக மாணவர்கள் இந்தித் திணிப்புக்கு எதிராகவும், அன்னைத் தமிழ் மொழியை பாதுகாப்பதற்காகவும் நடத்திய  மொழிப்போரால் ஏற்பட்ட காங்கிரஸ் கட்சிக்கு எதிரான உணர்வைப் பயன்படுத்தி த்ன்  1967-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தது. ஆனால்,  இன்று வரை அன்னைத் தமிழை பாதுகாக்கவும், வளர்க்கவும் திமுக துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை.

பொறியியல் படிப்பில்  தமிழ்ப் பாடத்தைக் கட்டாயமாக்கி விட்டு, அப்பாடத்தை நடத்த தற்காலிக ஆசிரியர்களைக் கூட திமுக அரசு நியமிக்கவில்லை என்றால், அன்னைத் தமிழுக்கு  திமுக எந்த அளவுக்கு துரோகம் செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம். இதுதான் திமுக தமிழ் வளர்க்கும் லட்சணமா? அண்ணா பல்கலைக்கழகத்திலும், அதன் உறுப்புக் கல்லூரிகளிலும் தமிழ்ப் பாடத்தைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்களை  திமுக அரசு  உடனடியாக நியமிக்க வேண்டும்’’ என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தாய்மாமன் சீர்சுமந்து வாராண்டி.." தாய்மாமன் தங்க மோதிர திட்டம் இன்று தொடக்கம்! மதுரையில் தொடங்கும் விஜய்!
Bank Strike: கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
கவலை வேண்டாம்..! இன்று எல்லா வங்கிகளும் வழக்கம்போல் இயங்கும் - வேலை நிறுத்தம் வாபஸ் - என்ன ஆச்சு?
TN Weather News: இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
இன்று 19 மாவட்டங்களுக்கு வார்னிங்..! எங்கெல்லாம் கனமழை? சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Mahindra Thar OG: தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
தார் OG மாதாந்திர தவணை திட்டம்..! 3,5,7 ஆண்டுகளுக்கான ப்ளான் - EMI எவ்ளோ? ரூ.9,000 போதுமே
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Embed widget