மேலும் அறிய
சிவகங்கை இளைஞர்களே, வெளிநாட்டுப் படிப்பு கனவா? IELTS பயிற்சி மூலம் தாட்கோ வழங்கும் வாய்ப்பை பயன்படுத்துங்கள் !
இப்பயிற்சிக்கான ஒன்றரை மாத கால அளவு, விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை மற்றும் உணவு செலவினத்தொகை தாட்கோ சார்பில் வழங்கப்படும்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியர்
Source : whats app
சிவகங்கை மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்த இளைஞர்கள், சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி International English Language Testing System (IELTS) www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்- மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கா.பொற்கொடி, அவர்கள் தகவல்.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) சார்பாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணாக்கர்கள் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, அயர்லாந்து, பிரான்ஸ் மற்றும் நியூசிலாந்து போன்ற முன்னனி வெளிநாட்டு பல்கலைகழகங்களில் இளங்கலை அல்லது முதுகலை பட்டபடிப்பு பயில அடிப்படையான சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான பயிற்சி (International English Language Testing System (IELTS)). இப்பயிற்சியினை பெற விரும்பும் மாணாக்கர்கள் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவராகவும், 18 முதல் 35 வயதிற்குட்பட்டவராகவும், பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும். மேலும், குடும்ப வருமானம் ஆண்டிற்கு ரூ 3.00 லட்சத்திற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். இப்பயிற்சிக்கான ஒன்றரை மாத கால அளவு, விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவினத்தொகை மற்றும் உணவு செலவினத்தொகை தாட்கோ சார்பில் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
எனவே. சர்வதேச ஆங்கில மொழி சோதனை முறை தேர்விற்கான (International English Language Testing System (IELTS)) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த இளைஞர்கள் தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய கல்வி செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் கல்வி செய்திகளைத் ( Tamil Education News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















