மேலும் அறிய

மதுரையில் உணவகத்தில் கார் மோதி கொலை முயற்சி: வழக்கறிஞருக்கு 8 ஆண்டு சிறை.. பரபரப்பு தீர்ப்பு !

கார் புகுந்த வழக்கில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில், வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உணவகத்தில் காரை ஏற்றி கொலை முயற்சி செய்த வழக்கில் வழக்கறிஞருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மாவட்ட நீதிமன்றம் உத்தரவு.
 
உணவகத்தின் மீது கல் வீசி தாக்குதல் 
 
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கௌரி கிருஷ்ணா உணவகத்தில், கடந்த 2016 ஏப்ரல் 23 ஆம் தேதியன்று மதுரை SSகாலனி அருள்நகரை சேர்ந்த வழக்கறிஞர் கார்மேகம் என்பவர் இடப் பிரச்னையின் காரணமாக
உணவகத்தின் மீது கல் வீசி தாக்குதல் நடத்தினார். தொடர்ந்து தனது காரை கொண்டு அதிவேகமாக ஓட்டி வந்து உணவகத்தின் முன்புறமுள்ள கண்ணாடியை உடைத்து, ஓட்டலுக்குள் புகுந்து விபத்து ஏற்படுத்தினார்.
 
கொலை வழக்கு பதிவு
 
இதில் உணவத்தில் பணியாற்றிய 1. மஞ்சு பாரதி 2. முத்து லெட்சுமி 3. மீனா மற்றும் சுப்புராம் ஆகியோருக்கு   பலத்த காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக எஸ்.எஸ்.காலனி காவல்துறையினர் கார்மேகம் மற்றும் அவரது மனைவி நாகமணி மற்றும் உள்ளிட்ட சிலர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்தனர்
 
மாவட்ட நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றது
 
இந்த வழக்கானது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 10 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்றுவந்தது.   இந்நிலையில் இந்த வழக்கானது இறுதிகட்ட விசாரணை முடிவடைந்துள்ள நிலையில், இன்று  வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கானது மதுரை மாவட்ட ஐந்தாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜோசப் ஜாய் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கறிஞர் கார்மேகத்திற்கு கொலை முயற்சி பிரிவில் 8 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.
 
வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
 
சொத்தை சேதப்படுத்திய வழக்கில் 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் என ஏக காலத்துக்கு அனுபவிக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் இருந்து  நாகமணி மற்றும் முத்துப் பிள்ளை ஆகிய இருவரையும்  விடுவித்தும் உத்தரவிட்டார். இதையடுத்து வழக்கறிஞர் கார்மேகத்தை காவல்துறையினர் பலத்த பாதுகாப்புடன் அழைத்துசென்று  சிறையில் அடைத்தனர். 10 ஆண்டுகளுக்கு முன்பாக மதுரையில் உணவகத்திற்குள் காரை ஓட்டி சென்று விபத்து ஏற்படுத்தியது. வழக்கில் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில்  வழக்கறிஞருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
நாக்பூர் தீக்ஷ பூமி பௌத்த திருவிழா: ரூ.5000 மானியம் பெற தமிழக பௌத்தர்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
தமிழகத்தில் 33 ரயில்வே மேம்பாலங்கள்... இனி வாகன ஓட்டிகள் ரயில்வே கேட்டில் காத்துக் கிடக்க தேவையில்லை !
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
ஒட்டன்சத்திரம் அருகே ஒற்றை யானை உலா: மக்கள் பீதி, வனத்துறைக்கு அவசர கோரிக்கை!
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !
மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கில் தமிழ் மந்திரம்: தீர்ப்புக்காக ஒத்திவைப்பு செய்த நீதிமன்றம் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
Minister Vanniyarasu: ”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
”திமுகவினர் பொறாமையில் பேசுகின்றனர்” கல்வி நிதி விவகாரம் - அமைச்சர் வன்னியரசு பதிலடி
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Upcoming Hyundai Cars: வரப்போது 5 ஸ்ட்ராங் ஹைப்ட்ரிட் கார்.. ஹுண்டாய் இறக்கப்போகும் அந்த பஞ்ச பாண்டவர்கள் யார்? யார்?
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
Chennai Bengaluru Bullet Train: 350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
350 கி.மீ SPEED... வெறும் 1.13 மணி நேரம்.! சென்னை- பெங்களூர்- அமராவதி வழியாக புல்லட் ரயில்.! அசத்தல் PLAN
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
மக்களே...மாதம் 14 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை; ஐடிஐ தொழில் பழகுநர் பயிற்சி- விண்ணப்பிப்பது எப்படி?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
வீடு கட்ட ரூ.5 லட்சத்தை அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கு கிடைக்கும்.? விண்ணப்பிப்பது எப்படி.?
Embed widget