(Source: ECI/ABP News/ABP Majha)
Schools reopen: விரைவில் பள்ளிகள் திறப்பு- தயாராகும் பேருந்துகள்! ஆய்வுப்பணியில் அதிகாரிகள் தீவிரம்
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 13ஆம் தேதி (திங்கட்கிழமை) 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேருந்துகளில் இன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோடை விடுமுறை முடிந்து, ஜூன் 13ஆம் தேதி (திங்கட்கிழமை) 1 முதல் 9 ஆம் வகுப்பு வரை தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பேருந்துகளில் இன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கொரோனா தொற்றால் தள்ளிப்போன திறப்பு
தமிழ்நாட்டில் கொரோனா பெருந்தொற்று அலைகளால் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போனது. இதை அடுத்து, கடந்த கல்வியாண்டில் செப்டம்பர் மாதம்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு, வகுப்புகள் தொடங்கின. மீண்டும் கொரோனா 3ஆம் அலை காரணமாக ஜனவரி மாதம் பள்ளிகள் மூடப்பட்டு, பிப்ரவரி மாதத்தில் மீண்டும் திறக்கப்பட்டன.
இந்த சூழலில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், மே மாதத்தில் மாநிலம் முழுவதும் 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்றன. இந்தப் பொதுத்தேர்வு மே இறுதியில் முடிவடைந்தது.
மே 14-ல் இருந்து கோடை விடுமுறை
இதற்கிடையே மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மே 14 முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த மாணவர்களுக்கு ஜூன் 13ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.
இந்நிலையில் மாநிலம் முழுவதும் பேருந்துகளில் இன்று ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளி வாகன ஊழியர்களுக்கு தீ தடுப்பு பயிற்சி உள்ளிட்ட சிறப்புப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
பள்ளிப் பேருந்துகளில் தீயணைப்புப் பெட்டி, முதலுதவிக் கருவி ஆகியவை உள்ளனவா என்றும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் மெல்ல அதிகரித்து வருவதை அடுத்து, புதிய வகை தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. பி.ஏ.4 மற்றும் பி.ஏ.5 வகை தொற்றுகள் 12 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிப் போகுமா என்று கேள்வி எழுந்தது.
எனினும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிகள் திறப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிபடத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்