மேலும் அறிய

Fengal Cyclone: புயலால் பாதிக்கப்பட்ட பள்ளிகள்; இதையெல்லாம் கட்டாயம் செய்யுங்கள்- அமைச்சர் அன்பில் அதிரடி உத்தரவு

மழையால்‌ பாதிக்கப்பட்ட பள்ளி வளாகங்களில்‌ விஷப்பூச்சிகள்‌, பாம்புகள்‌ போன்றவை இல்லாததையும்‌ உண்டு உறைவிடப்‌ பள்ளிகள்‌, KGBV பள்ளிகளின்‌ பாதுகாப்பினையும்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

ஃபெஞ்சல் புயலால்‌ பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களின்‌ பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்,

பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி ஃபெஞ்சல் புயலால்‌ பாதிக்கப்பட்ட 15 மாவட்டங்களின்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுடன்‌ காணொலிக்‌ காட்சி வாயிலாக பள்ளிகளின்‌ தற்போதைய நிலை மற்றும்‌ மேற்கொள்ளப்படும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ குறித்து ஆலோசனை மேற்கொண்டார்‌.

புயலால்‌ பாதிக்கப்பட்‌ட சென்னை, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, விழுப்புரம்‌, கடலூர்‌, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம்‌, தருமபுரி, திருப்பத்தூர்‌, செங்கல்பட்டு, இராணிப்பேட்டை, வேலூர்‌ மற்றும்‌ நீலகிரி உள்ளிட்ட 15 மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்களுடன் காணொலிக்‌ காட்சி வாயிலாக பள்ளிகளின்‌ தற்போதைய நிலை மற்றும்‌ மேற்கொள்ளப்படும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ குறித்து ஆலோசனை மேற்கொண்டார்‌.

இக்கூட்டத்தில்‌ பள்ளிக்‌ கல்வித்‌ துறை அமைச்சர்‌ அன்பில்‌ மகேஸ்‌ பொய்யாமொழி பேசியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சர்‌ உத்தரவின்படி துணை முதலமைச்சர்‌ ஆலோசனையின்‌ படி ஃபெஞ்சல்‌ புயலால்‌ பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களின்‌ பள்ளிகளின்‌ தற்போதைய நிலை குறித்தும்‌ மேற்கொள்ளப்படும்‌ பாதுகாப்பு நடவடிக்கைகள்‌ குறித்தும்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ பின்வரும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்‌.

மரங்களை உடனே அகற்றுக

மழையால்‌ பாதிக்கப்பட்‌டுள்ள பள்ளிகளில்‌, மரங்கள்‌ விழுந்திருப்பின்‌ அதனை உடனடியாக அகற்ற வேண்டும்‌. மழையால்‌ பள்ளிக்‌ கட்டடங்களில்‌ஏதேனும்‌ பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை மாவட்ட காண்காணிப்பு அலுவலர்கள்‌ உடனடியாக சம்மந்தப்பட்ட மாவட்டத்திற்கு சென்று ஆய்வு செய்து அதன்‌ அறிக்கையினை பள்ளிக் கல்வித்துறைக்கு வழங்கிட வேண்டும்‌.

குறிப்பாக விழுப்பும்‌, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும்‌ கடலூரில்‌ தென்டுபண்னையாற்றின்‌ அதிக நீரோட்டத்தால்‌ பாதிக்கப்பட்ட பள்ளிகளின்‌ தற்போதைய நிலையினை ஆய்வு செய்ய வேண்டும்‌. மேலும்‌, மின்‌ இணைப்புகள்‌ பள்ளிகள்‌ தொடங்கும்‌ முன்பு முறையாக பரிசோதிக்கப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்‌.

புத்தகங்கள், சான்றிதழ்களுக்கு பாதிப்பா?

மாணவர்களின்‌ நோட்டுப்‌ புத்தகங்கள்‌, பல்வேறு சான்றிதழ்கள்‌ மற்றும்‌பள்ளிகளில்‌ பராமரிக்கப்படும்‌ பதிவேடுகள்‌ எவையேனும்‌ பாதிக்கப்பட்டுள்ளனவா? என்பது குறித்தும்‌ ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும்‌.

மழையால்‌ பாதிக்கப்பட்ட பள்ளி வளாகங்களில்‌ விஷப்பூச்சிகள்‌, பாம்புகள்‌ போன்றவை இல்லாததையும்‌ உண்டு உறைவிடப்‌ பள்ளிகள்‌, KGBV பள்ளிகளின்‌ பாதுகாப்பினையும்‌ உறுதி செய்ய வேண்டும்‌. ஆதிதிராவிடர்‌ நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர்‌ நலத்துறை அலுவலர்களுடன்‌ தொடர்பு கொண்டு அத்துறைகளின்‌ கீழ்‌ வரும்‌ பள்ளிகள்‌, விடுதிகளின்‌ பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டும்‌.

குப்பைகளை அப்புறப்படுத்துக; போக்குவரத்தை உறுதி செய்க!

மேலும்‌ சேதமடைந்த விளையாட்டு மைதானங்களை சீரமைக்கவும்‌, பள்ளி வளாகங்களில்‌ உள்ள குப்பைகளை முறையாக அப்புறப்படுத்தவும்‌ துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்‌. மழையால்‌ சேதமடைந்த கட்டடங்களின்‌ அருகில்‌ மாணவர்கள்‌ செல்லாமல்‌ இருக்கவும்‌. பள்ளிக்கு மாணவர்கள்‌ தடையின்றி வருவதற்கு போக்குவரத்து வசதிகளை உறுதிசெய்திடவும்‌, ஏரி, குளங்கள்‌ உள்ளிட்ட நீர்நிலைகள்‌ நிரம்பியுள்ளதால்‌ மாணவர்கள்‌ அதன் அருகில்‌ செல்லாத வண்ணம்‌ மாணவர்களுக்கும்‌, மாணவர்களின்‌ பெற்றோர்களுக்கும்‌ தகுந்த அறிவுரைகளை வழங்கிட வேண்டும்‌.

மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர்‌ வசதி வழங்குவதை உறுதி செய்வதோடு, மழையால்‌ பாதிக்கப்பட்ட அனைத்துப்‌ பள்ளிகளையும்‌ முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌, மாவட்டக்‌ கல்வி அலுவலர்கள்‌ மற்றும்‌ வட்டாரக்‌ கல்வி அலுவர்கள்‌ நேரில்‌ சென்று ஆய்வு செய்ய வேண்டும்‌ எனவும்‌ அமைச்சர்‌ ‌ கூறினார்‌.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

SU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!கோதாவில் இறங்கிய அமைச்சர்  VOLLEYBALL ஆடிய செ.பாலாஜி  CHEER செய்த மாணவர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
WTC Points Table: ஹாட்ரிக் போச்சா..! உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் வாய்ப்பை இழந்த இந்தியா, புள்ளிப்பட்டியல் நிலவரம்
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
IND vs AUS: சிட்னியில் சட்னியான இந்தியா! 11 வருஷத்துக்கு பிறகு தொடரை வென்ற ஆஸ்திரேலியா!
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னையில் இன்று மழையா? தமிழ்நாட்டில் எங்கெல்லாம் கனமழை வெளுக்கும்? - வானிலை அறிக்கை
Anna University Issue: அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
அண்ணா பல்கலை வழக்கில் திருப்பூரைச் சேர்ந்தவருக்கு தொடர்பா.! டிஜிபி விளக்கம்
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
Jagdeep Singh: நாளொன்றிற்கு ரூ.48 கோடி, ஆண்டிற்கு? உலகின் அதிக சம்பளம் வாங்கும் சிஇஒ..! யார் இந்த இந்தியர்?
PM Modi : ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
ரூ. 12,200 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைக்கும் பிரதமர் மோடி; எங்கு தெரியுமா?
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
IND vs AUS: 1 ரன்ல எல்லாம் போச்சு! ஸ்மித் ஆசையில் மண்ணை அள்ளிப்போட்ட இந்தியா!
Embed widget