(Source: ECI/ABP News/ABP Majha)
SBI PO Prelims Result 2021: எஸ்பிஐ பிரோபஷனரி ஆபிசர் தேர்வு முடிவுகள் வெளியீடு- செக் செய்வது எப்படி?
நேர்காணல் பிப்ரவரி முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும். தேர்வு முடிவுகள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும்.
எஸ்.பி.ஐ பிரோபஷனரி ஆபிசர் (பி.ஓ) பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியானது.
https://bank.sbi/web/careers/crpd-po-2021-22-18 என்ற எஸ்பிஐ வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் முடிவுகள் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்
எஸ்.பி.ஐ வங்கி 2,056 பிரோபஷனரி ஆபிசர் (பி.ஓ) பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வெளியிட்டள்து. அதன்படி இந்தப் பணிக்கு அக்டோபர் 5-ஆம் தேதி முதல் 25ஆம் தேதிக்குள் sbi.co.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். இப் பணிக்கு விண்ணப்பம் செய்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதாவது ஒரு பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும் அல்லது அதற்கு நிகரான மத்திய அரசின் மூலம் சான்றளிக்கப்பட்ட ஏதேனும் ஓர் படிப்பைப் படித்திருக்க வேண்டும்.
முதல்கட்டத் தேர்வு 2021 ஆம் ஆண்டு நவம்பர் 20, 21, 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. அந்தத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
முதன்மைத் தேர்வு டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் ஜனவரி மாதத்தில் வெளியிடப்படும். நேர்காணல் பிப்ரவரி முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் நடைபெறும். தேர்வு முடிவுகள் பிப்ரவரி அல்லது மார்ச் மாதத்தில் அறிவிக்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு sbi.co.in என்ற முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
தேர்வு முடிவுகளை செக் செய்வது எப்படி?
https://bank.sbi/web/careers/crpd-po-2021-22-18 என்ற இணையதள முகவரிக்கு செல்ல வேண்டும்
முகப்பு பக்கத்தில், மேல் வலது மூலையில், careers என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.
SBI PO Pre result என்பதை க்ளிக் செய்யவும்.
புதிய விண்டோ திறக்கும்.
உங்களது ஐ.டி மற்றும் பாஸ்வேர்டை வைத்து லாகின் செய்துக் கொள்ள செய்ய வேண்டும்.
பிறந்த தேதி, பதிவெண் போன்ற முக்கிய விஷயங்களை சமர்பிக்கவும்.
உங்களுடைய தேர்வின் முடிவுகள் திரையில் தோன்றும்.
அதனை டவுன்லோடு செய்து, பிரிண்ட் அவுட் எடுத்துக் கொள்ள வேண்டும்.
கட்டாயம் வாசிக்க:
TNPSC Group 1 Result | குரூப் 1 முடிவுகள் வெளியீடு: 3,800 பேர் தேர்ச்சி; மார்ச்சில் முதன்மைத் தேர்வு
SBI CBO 2021 | எஸ்பிஐயில் ரூ.36 ஆயிரம் சம்பளத்துடன் வேலை; 1226 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாமா?
ABP Exclusive | இல்லம் தேடிக் கல்வி ஏன் அவசியம்? எதற்கு? - இளம்பகவத் ஐஏஎஸ் சிறப்புப் பேட்டி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்