Saturday Working Day: சனிக்கிழமை அன்று பள்ளிகள் செயல்படும்: சிஇஓ அறிவிப்பு- என்ன காரணம்?
சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
சென்னை மாவட்டத்தில் சனிக்கிழமை அன்று பள்ளிகள் முழு வேலை நாளாக செயல்படும் என்று முதன்மைக் கல்வி அலுவலர் அறிவித்துள்ளார்.
மழையால் பள்ளிகளுக்கு விடப்பட்ட தொடர் விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை (டிசம்பர் 3) அன்று வகுப்புகள் நடக்கும் என்று சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மார்க்ஸ் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை அன்று பின்பற்றப்படும் பாடவேளை வகுப்புகள் டிசம்பர் 3ஆம் தேதி அன்று பின்பற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#JUSTIN | சென்னை மாவட்டத்தில் டிச.3 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் - முதன்மைக் கல்வி அலுவலர்https://t.co/wupaoCzH82 | #Chennai #Schools pic.twitter.com/TAjw2R5cno
— ABP Nadu (@abpnadu) December 1, 2022
தமிழ்நாட்டில், கடந்த அக்டோபர் மாதம் 29 ஆம் தேதி வட கிழக்குப் பருவ மழை தொடங்கியது. அதை அடுத்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகி, நவம்பர் மாதம் முழுவதும் பெரும்பாலும் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதேபோல தமிழ்நாடு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, ஒரு சில இடங்களில் கன மழையும், பல இடங்களில் கன மழையும் பெய்தது.இதையடுத்து சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டன. நவம்பர் மாதத்தில் இவ்வாறு அடிக்கடி விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில், மழையால் பள்ளிகளுக்கு விடப்பட்ட தொடர் விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமை (டிசம்பர் 3) அன்று வகுப்புகள் நடக்கும் என்று மார்க்ஸ் தெரிவித்துள்ளார்.
மீண்டும் மழை
டிசம்பர் 5 ஆம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன் பின்னர், இது புயலாக மாற அதிகப்படியான வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற்றம் அடைந்தால் அதனால் தமிழகத்திற்கு அதிகப்படியான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த நவம்பர் மாதம் போதிய அளவு மழை பெய்யவில்லை என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இந்த டிசம்பர் மாதம் தமிழ்நாட்டிற்கு போதிய அளவிலான மழை பெய்யும் என நம்பப்படுகிறது.
அதே நேரத்தில் மழை அதிகப்படியாக பெய்தால் சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தினைப் போல் வெள்ளம் ஏற்படவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கெனவே சென்னை முழுவதும் ஸ்மார்ட் சிட்டி பணிகளும், மழைநீர் வடிகால் பணிகளும் நடைபெற்று வருகிறது. நவம்பர் மாத பருவ மழையால் ஏற்கனவே இந்தப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.