மேலும் அறிய

தற்காலிக ஆசிரியர்கள் மூலம் பள்ளிகளை நடத்துவதுதான் திமுக அரசின் 3 ஆண்டு சாதனையா?- ராமதாஸ் கேள்வி

நிரந்தர ஆசிரியர்களை நியமிக்காமல் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகளை நடத்துவதுதான் திமுக அரசின் மூன்றாண்டு சாதனையா என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: 

’’தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில்  4,989 இடைநிலை ஆசிரியர்கள் 5.154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876  முதுகலை ஆசிரியர்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர்கள் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம்  தற்காலிகமாக நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும், இது  திமுக அரசின் மூன்றாண்டு கால சாதனை என்றும் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை பெருமிதம் தெரிவித்துள்ளது. உண்மையில் தலைகுனிய வேண்டிய ஒரு விஷயத்தை சாதனையாக காட்ட அரசு முயல்வது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழ்நாட்டில் 2021ஆம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அரசு பள்ளிகளில் உள்ள காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்காக 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள், 3,188 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 13,331 ஆசிரியர்களை தற்காலிகமாக நியமிக்க ஆணையிடப்பட்டது. பின்னர் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 14,019 ஆக  அதிகரிக்கப்பட்டது. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதால் ஏற்படும் பாதிப்புகளை பட்டியலிட்டு, அவர்களுக்கு மாற்றாக  நிரந்தர ஆசிரியர்களை உடனே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன்.

இரு ஆண்டுகளாகத் தொடரும் தற்காலிக ஆசிரியர்கள்

அதுகுறித்து அப்போது விளக்கமளித்த தமிழக அரசு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரந்தர ஆசிரியர்களை தேர்வு செய்ய சில மாதங்கள் ஆகும் என்றும், அதுவரை மட்டுமே தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தது. ஆனால், அதன்பின் இரு ஆண்டுகளுக்கு மேலாகியும் தற்காலிக ஆசிரியர்களே பணிகளில் தொடர்கின்றனர்; நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. அரசு நினைத்திருந்தால் 6 மாதங்களில் நிரந்தர ஆசிரியர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்தியிருக்க முடியும். ஆனால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதில் விருப்பம் இல்லாததால் தான் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பதில் தமிழக அரசு காலதாமதம் செய்து வருகிறது.

அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமிப்பது அனைத்து வகைகளிலும் கேடானது ஆகும். முதலில் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர்களில் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10,000, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.12,000 என்ற அளவில் மிகக் குறைந்த ஊதியமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது அவர்களுக்கு எந்த வகையிலும் போதுமானது அல்ல.  இது தற்காலிக ஆசிரியர்களின் உழைப்பை சுரண்டும் செயல் ஆகும்.

அடுத்ததாக தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது சமூகநீதிக்கு  பெரும் தீங்கை ஏற்படுத்தும். தற்காலிக ஆசிரியர்கள் பள்ளிகள் அளவில், பள்ளி மேலாண்மை குழுவால் நியமிக்கப்பட்டதால், அதில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படவில்லை. அவர்களுக்கு மாற்றாக புதிய நிரந்தர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்தால், அதில் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட்டிருக்கும்.   ஆனால், தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டே இரு ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளிகளை நடத்தி வருவதால், சமூகநீதிக்கும் அரசு பெருந்துரோகம் செய்கிறது.

மூன்றாவதாக தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவோர் மீது எந்தவித பொறுப்புடைமையையும் சுமத்த முடியாது.  அதனால் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்குவதை  அரசுகளால் உறுதி செய்ய முடியாது. இந்த மூன்று சிக்கல்களுக்கும் ஒரே தீர்வு அரசு பள்ளிகளுக்கு நிரந்தரமான ஆசிரியர்களை  நியமிப்பது மட்டும் தான். ஆனால், அதை செய்ய அரசு தயாராக இல்லை.

2207 ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுப்பு

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 2207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களால் காலியான இடங்களுக்கும் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்க  அறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கும் போதிலும், தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை காலியிடங்களின் எண்ணிக்கையை விட மிகக்குறைவாகவே இருக்கிறது என்பதுதான் உண்மை.

தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்களுக்கும், தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, இப்போது அதை செய்யவில்லை என்பது மட்டுமின்றி, காலியிடங்களையும் தற்காலிக ஆசிரியர்களக் கொண்டு நிரப்புவது நியாயமல்ல.  தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது மிகவும் ஆபத்தானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ள நிலையில், அதை மனதில் கொண்டு நிரந்தர ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும்.

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஏழைக் குடும்பங்களில் இருந்து வருபவர்கள். அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தால் தான் அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL 2025 MI vs KKR: முரட்டு கம்பேக்! கொல்கத்தாவை சுருட்டி வீசிய மும்பை! 117 ரன்களை ஈசியா அடிக்குமா பாண்ட்யா படை?
IPL 2025 MI vs KKR: முரட்டு கம்பேக்! கொல்கத்தாவை சுருட்டி வீசிய மும்பை! 117 ரன்களை ஈசியா அடிக்குமா பாண்ட்யா படை?
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aniket Verma | ”தடைகள் எதையும் மகனே வென்று வா” தாய்க்கு செய்த சத்தியம்! யார் இந்த அனிகேத் வர்மா?ADMK BJP Alliance | ராஜ்ஜியசபா சீட் கேட்ட பாஜக?செங்கோட்டையனை வைத்து செக்! BACK அடிக்கும் எடப்பாடி | Sengottaiyan | Edappadi Palanisamy | Amishah | Rajiya Sabha SeatSengottaiyan | செங்கோட்டையனுக்கு V. K. Pandian:

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL 2025 MI vs KKR: முரட்டு கம்பேக்! கொல்கத்தாவை சுருட்டி வீசிய மும்பை! 117 ரன்களை ஈசியா அடிக்குமா பாண்ட்யா படை?
IPL 2025 MI vs KKR: முரட்டு கம்பேக்! கொல்கத்தாவை சுருட்டி வீசிய மும்பை! 117 ரன்களை ஈசியா அடிக்குமா பாண்ட்யா படை?
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
New Traffic Rules: போக்குவரத்து சலானை கிளியர் பண்ணிட்டிங்களா? ஏப்ரல் 1 முதல் புது ரூல்ஸ்! லைசன்ஸ் பத்திரம்!
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
EPS: அதிர்ச்சியில் ஈபிஎஸ்; அதிமுகவில் அடுத்த பூகம்பம்- மீண்டும் டெல்லி செல்லும் செங்கோட்டையன்?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
IPL 2025: டுப்ளிசிஸ் கழுத்தில் தூக்கு கயிறு.. துப்பாக்கி முனையில் மிரட்டல் - என்ன நடக்கிறது?
Pakistan Earthquake: பாகிஸ்தானில்  திடீர் நிலநடுக்கம்!
Pakistan Earthquake: பாகிஸ்தானில் திடீர் நிலநடுக்கம்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
சென்னையில் டெலிவரி செய்யும் நபர்களுக்கு வெயில் காலத்தில் ஜில் அப்டேட்! சென்னை மாநகராட்சியின் அசத்தல் ப்ளான்!
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
Nidhi Tewari IFS: பிரதமர் மோடியின் புதிய தனிச்செயலாளர் நிதி திவேரி! யார் இந்த இளம் IFS அதிகாரி?
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
சினிமா ஆசைகாட்டி வன்கொடுமை...கும்பமேளா வைரல் பெண்ணை வைத்து படம் இயக்கிவந்த இயக்குநர் கைது
Embed widget