Teacher Recruitment: ஆசிரியர் நியமனத்தில் இட ஒதுக்கீடு குறைப்பு; ஏன்? யாருக்கு? இதோ விவரம்!
பள்ளிக் கல்வித்துறையில் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி சிறப்பு விதிகளில் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50% பதவி உயர்வுக்கும் 50% நேரடி நியமனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதுகலை ஆசிரியர் நியமனத்தில் இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 10% இடஒதுக்கீடு 8%ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனினும் குறைக்கப்பட்ட 2 சதவீதம் அமைச்சுப் பணியாளர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்துக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:
''பள்ளிக் கல்வி தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி- முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பதவி உயர்வுக்கு ஒதுக்கப்படும் 50 சதவிகித பணியிடங்களில் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு 2% ஒதுக்கீடு அடிப்படையில் பணிமாறுதல் மூலம் முதுகலை ஆசிரியராக பணி வழங்கப்படும் நடைமுறையில் விதித் திருத்தம் செய்யப்பட்டு உள்ளது.
பதவி உயர்வும் நேரடி நியமனமும் பாதி பாதி
பள்ளிக் கல்வித்துறையில் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி சிறப்பு விதிகளில் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களில் 50% பதவி உயர்வுக்கும் 50% நேரடி நியமனத்திற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
கண்காணிப்பாளர், உதவியாளர், இளநிலை உதவியாளர்/ தட்டச்சர் பதவிகளில் இருந்து முதுகலை ஆசிரியராக பணிமாறுதல் மூலம் (Recruitment by transfer) செல்வதற்கு பதவி உயர்வுக்கு என ஒதுக்கீடு செய்யப்பட்ட 50 சதவிகித காலிப் பணியிடங்களில் இருந்து 2 சதவிகித பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மேல்நிலைக் கல்விப் பணி சிறப்பு விதிகளில் திருத்தம்
தற்போது மேற்காணும் 2% ஒதுக்கீட்டினை நேரடி நியமனத்திற்கென ஒதுக்கப்பட்ட 50% பணியிடங்களுள் 10% உள் ஒதுக்கீடு ஏற்கனவே பணியாற்றும் இடைநிலை/ சிறப்பு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுவதில் இருந்து 8% ஆக குறைத்தும் எஞ்சிய 2% அமைச்சுப் பணியாளர்களுக்கு உள் ஒதுக்கீடு செய்தும் தமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி சிறப்பு விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

