ITI Admission: ஐடிஐ நிறுவனங்களில் மீண்டும் மாணவர் சேர்க்கை; நேரடி முறையில் தொடக்கம் - சேர்வது எப்படி?
தமிழ்நாட்டில் ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மீண்டும் மாணவர் சேர்க்கை நேரடி முறையில் தொடங்கியுள்ளது. இதில் சேர்வது எப்படி எனக் காணலாம்.
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு சார்பில் 102 நிலையங்கள், 305 தனியார் நிலையங்கள் உள்ளன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற 8-ம் வகுப்பு அல்லது 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் ஐடிஐ எனப்படும் தொழிற்பயிற்சி நிலையங்களில் மீண்டும் மாணவர் சேர்க்கை நேரடி முறையில் தொடங்கியுள்ளதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:’
’’தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற் பயிற்சி நிலையங்கள் (ஐடிஐ) மற்றும் 305 தனியார் தொழிற் பயிற்சி நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் இன்றைய தொழிற்சாலைகளுக்கு தேவையான தொழில் 4.0 உள்ளிட்ட பல நவீன தொழிற்பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும் கடந்த ஆண்டுகளில் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெற்ற பயிற்சியாளர்களில் 80 சதவீதம் பேர் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பையும் பெற்றுள்ளனர். இதற்கிடையே 2024- 25 பயிற்சியாளர்கள் சேர்க்கைக்கு ஜூன் 26ஆம் தேதி வரை இணையதளத்தில் கலந்தாய்வு நிறைவு செய்யப்பட்டது.
இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி, தற்போது 8 மற்றும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கான நேரடி சேர்க்கை தொடங்கி உள்ளது. சேர்க்கை ஜூலை 15ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
மாணவர்கள் தாம் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்வி சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாம் விரும்பும் தொழிற்பிரிவை தேர்வு செய்து சேர்ந்து கொள்ளலாம். மாணவர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.
விண்ணப்பிப்பது எப்படி?
மாணவர்களின் விண்ணப்பங்கள் www.skiltraining.In.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இணையதளத்தில் பதிவு செய்ய வசதி இல்லாத மாணவர்கள், தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. https://nimiprojects.in/detonlineadmission2024/index.php என்ற இணைப்பை க்ளிக் செய்து தேவையான தகவல்களைப் பெறலாம்.
யூடியூப் வீடியோ இணைப்பு https://www.youtube.com/watch?v=-0oga-RkOwA&embeds_referring_euri=https%3A%2F%2Fnimiprojects.in%2F&source_ve_path=MzY4NDIsMjg2NjY&feature=emb_logo க்ளிக் செய்தும் மாணவர்கள் விண்ணப்பிக்க முடியும்.
கூடுதல் விவரங்களுக்கு 9499055689 என்ற தொலைபேசி / வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.
itiadmission2024@gmail.com - என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்’’.
இவ்வாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் தெரிவித்துள்ளார்