மேலும் அறிய

சித்தா, ஆயுர்வேதா படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு! முழு விவரம் உள்ளே!

ஆயுர்வேதா, சித்தா(2), யுனானி, ஹோமியோபதி படிப்பிற்கான தரவரிசை பட்டியல் மற்றும் இடஒதுக்கீடு ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.

ஆயுர்வேதா, சித்தா(2), யுனானி, ஹோமியோபது படிப்பிற்கான தரவரிசை பட்டியல் மற்றும் இடஒதுக்கீடு ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். 

அரசு ஆயுர்வேதா, சித்தா(2), யுனானி, ஹோமியோபதி என ஐந்து மருத்துவக் கல்லூரிகளில் 280 இடங்கள் உள்ளன. அதில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 21 இடங்களும், மற்ற இடங்கள் 259 உள்ளன.

26 தனியார் மருத்துவக்கல்லூரிகள் அதில் மொத்தம் 1660 இடங்கள் உள்ளன. அதில் 762 அகில இந்திய ஒதுக்கீடு இடங்களாகவும்,  நிர்வாக இட ஒதுக்கீட்டிற்கு 425 இடங்களும் ஆகும்.

அரசு  ஒதுக்கிட்டு இடங்களாக 822 இடங்களும், 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்கு 115 இடங்களும் உள்ளது.

இதுவரை பெறப்பட்ட அரசு கல்லூரிகளுக்கான விண்ணப்பங்கள் 2756, அதில் தகுதியான விண்ணப்பங்களாக 2573,  தரவரிசையில் பட்டியலில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவரின் மதிப்பெண் 580.

நிர்வாக ஒதுக்கீட்டின் கீழ் 878 விண்ணப்பங்கள், தகுதியான விண்ணப்பங்கள் 812, நிர்வாக ஒதுக்கீட்டிற்கு முதல் மதிப்பெண் பெற்ற மாணவர் 474.

இந்த இடங்களுக்கான தரவரிசையில் பட்டியல் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த ஆட்சியில் விருப்பத்திற்கேற்ப பணி மாற்றம் மற்றும் கலந்தாய்வு வெளிப்படையாக நடைபெற்று வருகிறது. கடந்த ஆண்டு நிதி அறிக்கையில் 136 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதன் செயல்பாடுகள் அனைத்துமே புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. 

136 வது அறிவிப்பானது., தனியார் நிறுவனங்கள் தயாரிக்கும் மருந்துகளை குறைந்த செலவில் சோதனை செய்த பிறகே விற்பனைக்கு கொண்டுவரப்படும்  என அறிவிக்கப்பட்டது.  அதேபோல் சித்த மருத்துவத்தில் தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் மருந்துகளை சோதனை செய்வது வழக்கம் என  கூறினார்.  

மேலும் 3 கோடி செலவில் ஆராய்ச்சி கூடம், உலகத்தரம் வாய்ந்த உயர் அழுத்த திரவச்சாலை ஆய்வகங்கள் மருத்துவ துறையில் செயல்பட்டு வருகிறது. அங்கு ஆய்வு மேற்கொண்டு  கொடுக்கும் மருந்துகள் தரம் மிக்கதா என்பதை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். 

முன்னதாக நேற்றைய தினம் கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்ற கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவத்துறை விளக்கமளித்தது. அதில், “முதலில் தசை கிழிந்து திரவ வடிவிலான மையோகுளோனஸ் என்ற திரவம் வெளியேற துவங்கியது. திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்தில் கலந்ததால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் செயலிந்தது. இதையடுத்து ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்த நிலையில் பிரியா உயிரிழந்தார் என தெரிவித்தனர். 

உயிரிழந்த கால்பந்து வீராங்கனை பிரியாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் மற்றும் குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.  மேலும் கால்பந்து வீராங்கனை பிரியாவின் கால் அகற்றப்பட முக்கிய காரணமாக இருந்த எலும்பியல் துறையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget