மேலும் அறிய

QS World University TamilNadu Rankings: உலகின் தலைசிறந்த பல்கலை.கள் பட்டியல் வெளியீடு- தமிழ்நாட்டில் எந்தெந்தக் கல்லூரிகள்? முழு விவரம்

QS World University TamilNadu Rankings: தமிழ்நாட்டில் முதலிடத்தில் ஐஐடி சென்னையும் அடுத்த இடத்தில் அண்ணா பல்கலைக்கழகமும் உள்ளன. 3ஆவது இடத்தில் என்ஐடி திருச்சி உள்ளது.

உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியல் இன்று வெளியான நிலையில், அதில் இடம்பெற்றுள்ள தமிழகப் பல்கலைக்கழகங்கள் குறித்து விளக்கமாகக் காணலாம்.  

உலகளவில் உயர்கல்வியின் தரம் குறித்து க்யூஎஸ் (குவாக்கரெல்லி சைமண்ட்ஸ்) என்ற அமைப்பு ஆய்வு செய்து, கல்வி நிறுவனங்களின் தர வரிசைப் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது. 9 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, இந்த தர வரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது.

தரவரிசைப் பட்டியல் தயாராவது எப்படி?

அதன்படி, கல்வி நிறுவனத்தின் நற்பெயர், ஆசிரியர்கள் பிரசுரித்த ஆய்விதழ்கள், கல்வி சார்ந்து இருக்கும் நற்பெயர், வேலைவாய்ப்புகள், நிலைத் தன்மை, ஆசிரிய-மாணவர் விகிதம், கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் வெளிநாட்டு ஆசிரியர்கள் எண்ணிக்கை, சர்வதேச ஆராய்ச்சி பின்புலம், வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை ஆகிய 9 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு, மதிப்பெண்கள் வழங்கப்படுகின்றன. அதைக் கொண்டு, க்யூஎஸ் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்த ஆண்டு உலகம் முழுவதும் 105 இடங்களில் இருந்து 1,500 கல்வி நிறுவனங்கள் ஆய்வுக்காக எடுத்துக்கொள்ளப்பட்டன.

டாப் 5 யார்?

இந்த நிலையில் க்யூஎஸ் அமைப்பு தனது 21ஆவது சர்வதேச பல்கலைக்கழக தர வரிசைப்பட்டியலை இன்று (ஜூன் 19) வெளியிட்டது. இதில் அமெரிக்காவைச் சேர்ந்த மாசாசூசெட்ஸ் பல்கலைக்கழகம் முதலிடத்தில் உள்ளது. 13 ஆண்டுகளாக இந்த பல்கலைக்கழகமே முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தை லண்டன் இம்பீரியல் கல்லூரி பெற்றுள்ளது. அதேபோல ஆக்ஸ்ஃபோர்டு பல்கலை. 3ஆவது இடத்தையும் ஹார்வர்டு பல்கலை. 4ஆவது இடத்தையும் பிடித்துள்ளன. காம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் 5ஆம் இடத்தில் உள்ளது.

க்யூஎஸ் உலக பல்கலைக்கழக தர வரிசைப் பட்டியலின் முதல் 200 இடங்களில், 2 இந்திய பல்கலைக்கழகங்கள் மட்டுமே இடம் பிடித்துள்ளன. முதல் 300 இடங்களில் 6 இந்திய கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.  

தமிழ்நாட்டில் எந்தெந்தக் கல்வி நிறுவனங்கள்?

தமிழ்நாட்டில் முதலிடத்தில் ஐஐடி சென்னையும் அடுத்த இடத்தில் அண்ணா பல்கலைக்கழகமும் உள்ளன. 3ஆவது இடத்தில் என்ஐடி திருச்சி உள்ளது. இதோ முழு பட்டியல்!

227 - ஐஐடி சென்னை

383- அண்ணா பல்கலைக்கழகம்

701- 710 – என்ஐடி (தேசியத் தொழில்நுட்ப மையம்) திருச்சி

791- 800 – விஐடி (வேலூர் தொழில்நுட்ப மையம்) , வேலூர்

951-1000 - சவீதா மருத்துவ மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் (SIMATS), திருவள்ளூர்

1001-1200 - SRM இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, சென்னை

1201-1400 – புதுச்சேரி பல்கலைக்கழகம்

1201-1400 - சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்)

இதையும் வாசிக்கலாம்: QS World University Rankings: உலகின் டாப் பல்கலைக்கழகங்கள் எவை தெரியுமா? முதலிடத்தில் மும்பை ஐஐடி- யாருக்கு எந்த இடம்?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
TN Rain Update: அடுத்த ரவுண்டா? 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களின் நிலை? வானிலை அறிக்கை
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Power Shutdown ; தமிழகத்தில் இன்று ( 17 - 12 - 2024 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
Rasipalan December17: மிதுனத்துக்கு விவேகம்; கடகத்துக்கு பரிசு - உங்க ராசிக்கு எப்படி?
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
One Nation One Election: யார் சொன்னாலும் கேட்கமாட்டோம் - இன்று தாக்கலாகிறது ”ஒரே நாடு ஒரே தேர்தல்” மசோதா - மோடி அரசு
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Embed widget