மேலும் அறிய

Private Candidate Application:10,11,12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு; விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு: விவரம்

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு  மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு  மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு, தனித் தேர்வர்கள் தத்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிப்ரவரி 2ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று தெரிவித்துள்ளதாவது:

’’நடைபெற உள்ள மார்ச், ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தகுதியான தனித்தேர்வர்களிடம் இருந்து, தத்கல் முறையில் இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

தத்தல் (சிறப்பு அனுமதி) முறையில் விண்ணப்பிப்பதற்கான நாட்கள்

ஏற்கனவே 28.12.2022 (திங்கட்கிழமை) முதல் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) வறையிலான தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் தற்போது 05.01.2023 (வியாழக்கிழமை) முதல் 07.01.2023 (சனிக்கிழமை வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செலுத்தி ஆன்லைனில் தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

விண்ணப்பிப்பது எப்படி?

இந்நிலையில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அறிவிப்பின்படி, மேற்குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு/ இரண்டாம் ஆண்டு தனித்தேர்வர்கள் தற்போது தக்கல் முறையில் இன்று (ஜனவரி 30) முதல் 02.02.2023 வரையிலான நாட்களில் விண்ணப்பிக்கலாம்.

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களில் (Government Examinations Service centres) நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்பு கட்டணமாக செறுத்தி ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம்.

மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மையங்களின் (Government Examinations Service centres) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் இணையதளத்தில் அறிவுரைகள் ஆகியவற்றை விண்ணப்பதாரர்கள் அறிந்து www.dgettngov.inஎன்ற கொள்ளலாம். 

மேலும், இந்த விவரங்களை அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்கள், சம்பந்தப்பட்ட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களிலும் அறிந்து கொள்ளலாம்’’.

இவ்வாறு அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இதையும் வாசிக்கலாம்:
10 11 12th Exam Result: 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது? - தேதியை வெளியிட்ட அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

இதையும் வாசிக்கலாம்: 10, 11, 12th Practical Exam: 10, 11, 12ஆம் வகுப்பு தேர்வு தேதிகளில் மாற்றம்: எந்தெந்த தேதி தெரியுமா? முழு விவரம்! https://tamil.abplive.com/education/10th-11th-12th-practical-exam-dates-changed-directorate-of-government-examinations-98955

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
Kalki 2898 Ad Movie Review: 600 கோடிக்கு படம் வொர்த்தா? இல்லையா? - பிரபாஸ் , கமல் நடித்துள்ள கல்கி படத்தின் திரை விமர்சனம்
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
ஒசூரில்‌ 2 ஆயிரம் ஏக்கரில் சர்வதேச விமான நிலையம்‌; திருச்சியில் கலைஞர் நூலகம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Breaking News LIVE: திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
திருமணமான பெண்களுக்கு பணி இல்லையா..? பாக்ஸ்கான் மறுப்பு..!
Stock Market: உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
உச்சத்தில் பங்குச்சந்தை: சென்செக்ஸ் 79,000 புள்ளிகள் உயர்வு; 24,000 புள்ளிகளை கடந்த நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
Embed widget