Part Time Teachers: பகுதி நேர ஆசிரியர்களுக்கு குட் நியூஸ்! முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு: வெளியாகிறது அரசாணை!
பகுதி நேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்- முதல்வர் ஸ்டாலின்.

அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு, பணி நிரந்தம் செய்ய சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதிலுரை கொடுக்கும் நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
'’பகுதிநேர ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் அளிக்கப்படும்.
பகுதி நேர ஆசிரியர்களின் பணிக்காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும். இதற்கான ஆணைகள் விரைவில் வெளியிடப்படும்.
யாரும் கொடுக்காத வாக்குறுதிகளைக் கொடுத்தோம்
கடந்த தேர்தலின்போது யாரும் கொடுக்காத வாக்குறுதிகளை நாங்கள் கொடுத்தோம். முடிந்த அளவு அவற்றை நிறைவேற்றியும் இருக்கோம். கலைஞரின் கனவு இல்லத் திட்டத்தின்கீழ் மேலும் 1 லட்சம் புதிய வீடுகள் கட்டித் தரப்படும்.
ஓய்வூதியமும் உயர்த்தி அறிவிப்பு
சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கிராம ஊராட்சி செயலாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக 2 ஆயிரம் ரூபாயில் இருந்து 3,400 ரூபாயாக அதிகரிக்கப்பட உள்ளது. பணி நிறைவின்போது வழங்கப்படும் ஒட்டுமொத்தத் தொகை 1 லட்சம் ரூபாயில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
























