மேலும் அறிய

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!

தொழிற்பிரிவுகளில்,  சேர மாணவர்கள் கட்டாயம்  10 ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை வருகின்ற 14.08.2026  வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் நேரில் வருகை புரிந்து பயனடையலாம்  – மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

அரசு தொழிற்பயிற்சி நிலையம்
 
காரைக்குடியில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை வருகின்ற 14.08.2026  வரை நடைபெற உள்ளது. காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் ஏற்கனவே உள்ள பொருத்துநர் (Fitter), கடைசலர் (Turner), இயந்திர வேலையாள்(Machinist) போன்ற இரண்டு வருட தொழிற்பிரிவுகளும், கணினி இயக்குபவர் (COPA) போன்ற ஓராண்டு தொழிற்பிரிவுகளுடன் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப புதிதாக தொடங்கப்பட்டுள்ள (Industry 4.0 TATA Technology) தொழில் 4.0 மைய தொழிற்பிரிவுகளான மேம்பட்ட அடிப்படை வடிவமைப்பாளர் மற்றும் மெய்நிகர் சரிபார்ப்பாளர் (Basic Designer and Virtual Verifier (Mechanical) போன்ற இரண்டு வருட தொழிற்பிரிவுகளும், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுநர் (Industrial Robotics and Digital Manufacturing Technician) ஓராண்டு தொழிற்பிரிவுகளும் உள்ளன. மேற்கண்ட தொழிற்பிரிவுகளில்,  சேர மாணவர்கள் கட்டாயம்  10 ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
 
தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை  உதவி மையம்
 
மேலும், ”தொழிற்பயிற்சி நிலைய சேர்க்கை  உதவி மையமான” காரைக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு மாணவர்கள் நேரில் சேர்ந்து கொள்ளலாம். அவ்வாறாக விண்ணப்பிக்க வருகைபுரியும் பொழுது மாணாக்கர்கள் தங்களது நிரந்தர தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி, மதிப்பெண் சான்றிதழ் (10th), சாதி சான்றிதழ், மாற்று சான்றிதழ், முன்னுரிமை சான்றிதழ், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் வங்கி கணக்குப் புத்தக நகல் ஆகியவை உடன் கொண்டுவரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.  
 
பயிற்சி காலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் ரூ.25,000- சம்பளத்தில்  வேலை வாய்ப்பு
 
அதுமட்டுமன்றி, பயிற்சியின் போது அரசுப் பள்ளியில் படித்த அனைத்து பயிற்சியாளர்களுக்கும் அரசால் வழங்கப்படும் உதவித்தொகை மாதம் ரூ.1750- இலவசமாக பாடப்புத்தகங்கள், மிதிவண்டி, சீருடைகள், மூடுகாலணிகள், பஸ்பாஸ் ஆகியவை பெற்று வழங்கப்படும். மேலும், பயிற்சியின்போது  பிரபல தொழில் நிறுவுனங்களில் பயிற்சியும், பயிற்சி காலம் முடிவுற்றவுடன் பிரபல நிறுவனங்களில் ரூ.25,000- சம்பளத்தில்  வேலை வாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். எனவே, ITI  பயிற்சியில் சேர்ந்து பயனடைவீர். மேலும், சேர்க்கை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு  9499055784, 9499055785  என்ற அலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு விபரங்கள் பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ப.ஆகாஷ், தெரிவித்துள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
ரூ.25,000 சம்பளத்தில் வேலை வேண்டுமா? காரைக்குடி ITI சேர்க்கை நீட்டிப்பு!
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
CAT 2026: MBA கனவை நனவாக்கலாமா? விண்ணப்பப் பதிவு தொடக்கம்! தகுதி, வழிமுறை, விவரம்
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Maruti Brezza Vs Renault Kiger: மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
மாருதி பிரெஸ்ஸாவா.? ரெனால்ட் கைகரா.? குறைவான பட்ஜெட்டில் நிறைவான எஸ்யூவி எது.? தெரிஞ்சுக்கோங்க
Maruti XL6 Facelift: செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
செம லுக் யா.! பிரபலமான XL6 எஸ்யூவியின் ஃபேஸ்லிஃப்ட்டை இந்தியாவில் களமிறக்கும் மாருதி சுசூகி
Innova Hycross on EMI: ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
ஹைடெக்கான இன்னோவா ஹைக்ராஸ் கார் வாங்க ஆசையா.? ரூ.1 லட்சம் முன்பணம் கட்டுனா எவ்ளோ EMI வரும்.?
Embed widget