மேலும் அறிய

தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!

அரசுப் பள்ளிகளில் 14 ஆண்டுகளாகப் பணியாற்றும் 12,000 பகுதிநேர ஆசிரியர்கள்; பணி நிரந்தரம் செய்யக் கோரிக்கை

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் கடந்த 14 ஆண்டுகளுக்கும் மேலாகக் குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் 12,000 பகுதிநேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு, தமிழகம் முழுவதும் உள்ள அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காகக் கணினி அறிவியல், உடற்கல்வி, ஓவியம், தையல், மற்றும் இசை ஆகிய சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கு 16,549 பேர் பகுதிநேர ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் இவர்களுக்கு மாதத் தொகுப்பூதியமாக வெறும் ரூ. 5,000 மட்டுமே வழங்கப்பட்டது.

12 ஆயிரம் பேர் மட்டுமே

காலப்போக்கில் போதிய வருமானம் இல்லாததாலும், வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவாலும் பலர் பணியிலிருந்து விலகிய நிலையில், தற்போது சுமார் 12,000 ஆசிரியர்கள் மட்டுமே தொடர்ந்து அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் பல கட்டங்களாக உயர்த்தப்பட்டு, தற்போது அதிகபட்சமாக ரூ. 15,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. வாரம் மூன்று அரை நாட்கள் வீதம் பணியாற்றும் இவர்களுக்கு, மே மாதத்திற்கான கோடை விடுமுறை ஊதியமும் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதைய பொருளாதாரச் சூழலில் இந்த மிகக் குறைந்த ஊதியத்தை வைத்துக்கொண்டு குடும்பம் நடத்த முடியாமல் இந்த 12,000 ஆசிரியர்களும் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். திமுகவின் தேர்தல் அறிக்கையில்  பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து ஆண்டுகள் பல கடந்த நிலையிலும், அந்த வாக்குறுதி முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

தொடர்ந்து தவெக அரசு அளித்த வாக்குறுதியில் 5 ஆண்டுகள் பணிபுரிந்த ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று கூறப்பட்டது. தவெக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள நிலையில் பட்ஜெட் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது. 

முதல்வர் தலையிட கோரிக்கை

எனவே, பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வர் இதில் உடனடியாகத் தலையிட்டு, 12,000 பகுதிநேர ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்குச் சிறப்பு காலமுறை ஊதியம் (Time Scale Pay) வழங்கி, முழுநேர ஆசிரியர்களாகப் பணி நிரந்தரம் செய்வதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் எனப் பகுதிநேர ஆசிரியர் கூட்டமைப்பினர் தமிழக அரசுக்கு அவசரக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
தவெக வாக்குறுதி என்னாச்சு? கண்ணீர் விடும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்கள்- பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை!
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்க மேலும் அவகாசம்! ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது: விண்ணப்பிக்க மேலும் அவகாசம்! ஆசிரியர்களுக்கு வாய்ப்பு!
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
மருத்துவக் படிப்புகளுக்கு கடும் போட்டி! புதுச்சேரி சென்டாக்கில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிப்பு!
மருத்துவக் படிப்புகளுக்கு கடும் போட்டி! புதுச்சேரி சென்டாக்கில் ஆயிரக்கணக்கில் விண்ணப்பங்கள் குவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
காவிரி விவகாரம்; கர்நாடகத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த தமிழ்நாடு - காரணம் என்ன?
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Karthigai Deepam Serial: தாறுமாறா விழுந்த சவுக்கடி.. சந்திரகலாவின் புதிய சதி! கார்த்திக் - ரேவதி தப்புவார்களா?
Chennai Power Cut: சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
சென்னைல ஆகஸ்ட் 4-ம் தேதி எந்தெந்த ஏரியாக்கள்ல பவர் கட் ஆகப் போகுதுன்னு தெரியுமா.? லிஸ்ட் இதோ
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியர் வேலை: நேர்காணல் மட்டுமே- கலந்துகொள்வது எப்படி?
Embed widget