உயிருக்கு போராடும் ஆசிரியர்... உருக்கமாய் வழிபாடு நடத்திய மாணவர்கள்! பரமக்குடியில் நெகிழ்ச்சி!
சிகிச்சையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தினசரியில் டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
உயிருக்கு போராடும் ஆசிரியர் விரைவில் குணமடைய வேண்டி பள்ளி மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனை செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தோளூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சவர்ணம் - இருளாயி தம்பதியின் மகன் ராஜசேகர்,32. திருமணமாகி 4 வயது ஆண் குழந்தை உள்ளது. பரமக்குடியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சையில் இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவருக்கு தினசரியில் டயாலிசிஸ் செய்யப்படுகிறது.
விவசாய குடும்பத்தைச் சேர்ந்த ராஜசேகரின் பெற்றோர்கள் கூலி வேலை செய்து அன்றாடம் வாழ்ந்து வருகின்றனர். ராஜசேகரின் பெற்றோர்கள் நீரிழிவு மற்றும் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ராஜசேகருக்கு மருத்துவ செலவுக்கு பணம் இன்றி தவித்து வருகின்றனர். ஒருபுறம் பெற்றோர் பணத்திற்காக அலையும் நிலையில் ராஜசேகர் உயிருக்காக போராடி வருகிறார். இதனையடுத்து அவர் பணிபுரியும் பள்ளியில் இன்று மாணவர்கள், உடன்பணி புரியும் ஆசிரியர்கள் ராஜசேகர் விரைவில் குணமடைய வேண்டி கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். ராஜசேகர் குணமடைய மருத்துவ சிகிச்சைக்கு உதவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தனர். இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்து உயிருக்கு போராடும் ஆசிரியர் குணமடைய வேண்டி பள்ளி மாணவர்கள் கூட்டுப்பிரார்த்தனையில் ஈடுபட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆசிரியர் மீண்டு வர வேண்டும் என்பதற்காக மாணவர்கள் மனம் உருகி வேண்டினர். நெகிழ்ச்சியான இந்த சம்பவத்தை கண்ட பலரும் கண் கலங்கினர்.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள் சில...
ரூ.500 கொடுத்தால் அரை மணி நேரத்தில் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ்: குள்ளநரி ‛குருவி’ சிக்கியது!https://t.co/Nl0ZGPedpX#Corona #Certficate #Fake #Chennai
— ABP Nadu (@abpnadu) October 21, 2021
டிசம்பர் 1ம் தேதி முதல் உயர்கிறது கேபிள் கட்டணம்... காரணம் என்ன? முழு விபரம் இதோ!https://t.co/LtbGWP5Obg#December #TRAI #Cable #Cost #Hike
— ABP Nadu (@abpnadu) October 21, 2021
ஏம்மா மேகனா... இது நியாயமா...? முரட்டு சிங்கிள்களை முரட்டு கோபத்திற்கு ஆளாக்கிய மேகனா மேரேஜ்!https://t.co/0fy0SUZBRT#Marriage #Viral #Netizens
— ABP Nadu (@abpnadu) October 21, 2021
மீண்டும் ஏ.ஆர்.ரகுமானுக்குப் பெருமை.. 64வது கிராமி விருதுகளில் ஒலிக்கும் `பரம சுந்தரி’!https://t.co/yHthSYHsd9#ARRahman #ParamSundari #GRAMMYs
— ABP Nadu (@abpnadu) October 21, 2021
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்